“முஸ்லிம் மீடியா போரம்” தர்ஹா நகரில் நடத்தும் ஊடகக் கருத்தரங்கு.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் பேருவளை கல்வி வலய உயர் வகுப்பு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள ‘21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கு மற்றும் களுத்துறை மாவட்டத்தில் பாடசாலைக் கல்வியை முடித்த இளைஞர், யுவதிகளுக்கு ஊடகத்துறை தொடர்பான அறிமுகக் கருத்தரங்கு ஆகிய இரு கருத்தரங்குகள் எதிர்வரும் 16ஆம் திகதி தர்ஹா நகர்,  அல் - ஹம்ரா மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளன.

பாடசாலைக் கல்வியை முடித்த இளைஞர், யுவதிகள் 40 பேர் ஊடக அறிமுகக் கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பேருவளை கல்வி வலயத்திலுள்ள 10  பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 100 முஸ்லிம் - தமிழ் மாணவர்கள் ஊடகக் கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஹஸீப் மரிக்காரின் கூட்டிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இரு கருத்தரங்குகளிலும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலர் வளவாளர்களாக பங்குபற்றவுள்ளனர்.

அன்று மாலை சான்றிதழ் வழங்கும் வைபவம் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தலைமையில் நடைபெறும். பிரதம அதிதியாக இலங்கை தேசிய மருத்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரூமி உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்வார்களென மீடியா போரத்தின் பதில் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா தெரிவித்தார்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment