சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டும் "Blue Whale Game" பெற்றார்கள் அவதானம்!

சமூக வலைதளம் பாவிப்பவர்கள் கட்டாயம் இந்த பதிவை கவனமாக வாசித்ததன் பின்னர் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

இந்த நூற்றாண்டின் அதி உச்ச நவீனத்தின் கண்டுபிடிப்பான ஆன்ட்ராயிட் மற்றும் அப்பில் கையடக்க தொலைபேசிகள் என்றால் அது மிகையாகாது. பொதுவாக இன்றைய நவீன யுகத்தில் அவ்வாறானதொரு சாதனம் நமது வாழ்வோடும் ஏன் எமது உடல் உருப்பில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. அவ்வாறான கைத் தொலைபேசிப் பாவனையில் இல்லாதவர்களை காணவே முடிவதில்லை அந்தளவுக்கு எம்மோடு பின்னிப் பிணைந்த ஒரு கருவியாக அது மாறிவிட்டது என்று கூட கூறலாம்.

பல சாதகமான அம்சங்களை கொண்ட இவ்வாறான கருவிகள் மூலம் எமக்கு நன்மை பெற்றுத்தரக்கூடிய பல அம்சங்கள் உள்வாங்கப்பட்டுள்ள அதேவேளை அந்த கருவிகள் ஊடாக எமக்கு பாதகமான, பாதுகாப்பற்ற பல விடயங்கள் அதில் உண்டெனவும் நாம் அறியாமல் இல்லை. இருப்பினும் நாம் எவ்வளவு அவதானமாக பாவனைக்கு உற்படுத்தினாலும் எம்மையும் மீறி பல அசம்பாவிதங்கள் இக்கருவியினூடாக எமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதுதான் உண்மை, அந்தவகையில் இக் கருவி சிறுவர் முதல் பெரியவர் வரை இன்று அனைவரும் நேசிக்கின்ற அதே நேரம் வயது வித்தியாசம் இன்றி எல்லோருக்கும் உபயோகிக்க முடியுமான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதும் இதன் விசேட தன்மையாகும்.

பொதுவாக வீட்டில் இருக்கின்றவர்கள் சிறுவர்களை மகிழ்விப்பதற்காக இவ்வாறான கருவிகளின் உதவியை நாடி பல வகையான video gamesகளை download செய்து தமது Android, apple iphone களை சிறுவர்களின் கைகளிலI பாவிப்பதற்காக கொடுக்கின்றனர். பின்னரான காலப்போக்கில் சிறுவர்கள் தாமாகவே கருவியை இயக்கக்கூடிய, தேவையான விளையாட்டு அம்சங்கள் கொண்ட Games களை பதிவிறக்கம் செய்யக்கூடிய வழிமுறைகளை சுயமாக கையால்கின்றனர். நாமும்  எமது பிள்ளைகள் புத்திக்கூர்மையாக இருக்கிறார்கள் அக்கருவியை சுயமாக இயக்கும் பான்டித்தியம் பெற்றவர்கள் என்ற வகையில் மற்றவர்களுடன் அதை பெருமையாக பகிர்ந்து கொள்கிறோம்.

 அதனால் எமது பிள்ளைகள் எவ்வாறு வழிகெடுக்கப்படுகிறார்கள் என்பதை கவனிக்க மறப்பதுடன் அதனால் எமது பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி நாம் கவலை கொள்வதில்லை இதன் விளைவாக அவர்கள் அவர்களுடைய கல்வி நடவடிக்கை மற்றும் உடல், உளரீதியான பல பாதிப்புகளுக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் பலரும் காலத்திற்கு காலம் எமக்கு தெரிவிக்கின்றனர்.

அது ஒருபுறமிருக்க தற்போது புதிதாக ஒரு சர்ச்சை எழுந்து வருகின்றது. ஆம் சிறுவர்களை குறிவைத்து அவர்களுடைய உயிரை காவுகொள்ளும் ஒரு விநோதமான விளையாட்டை சமூகவலைதளத்தின் ஊடாக உலாவ விட்டிருக்கிறார்கள்.

whatsapp, facebook, twitter போன்ற இன்னும் சில சமூக வலைதளங்கள் ஊடாக "Blue Whale Game"புளூவேள் (நீல திமிங்கில விளையாட்டு) என்ற புதுவகையான விளையாட்டை அறிமுகம் செய்துள்ளனர்.

சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "Blue Whale Game"னால் பல உடல்- உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பலர் தற்கொலை செய்யவும் காரணமாக அமைந்துள்ளது.

குறித்த Blue Whale விளையாட்டு ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள online Game கும் 50 நாட்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்த விளையாட்டு பல வினோத நிபந்தனைகள் கொண்டதாகவும் (யூதர்கள்களுடைய நிகழ்ச்சி நிரலாகும்)
காலக்கிரமத்தில் தற்கொலைக்கு தூண்டும் விளையாட்டாகவும் இதுவரையில் பலரை காவு கொண்டு வருகிறது.

எனவே பெற்றார்கள் தமது பிள்ளைகளுடைய நடவடிக்கையில் அவதானமாக இருப்பதுடன் முடிந்தளவு சிறுவர்களிடம் இருந்து உங்கள் ஆன்ட்ராயிட், அப்பில் போன்களை கொடுப்பதை விளையாட அனுமதிப்பதை நிறுத்திக் கொள்வது பாதுகாப்பான வழிமுறையாகும்.

அஹமட் புர்கான் 
கல்முனை

இது தொடர்பிலான வீடியோ இணைக்கப்பட்டுள்ளது...


மேலும்


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment