யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகம்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இந்த ஆய்வின் முடிவுகளுக்கமைய,

2009 ம் ஆண்டில் - 124பேர். 
2010 ம் ஆண்டில் -  137 பேர்.
2011 ம் ஆண்டில் - 141 பேர்.
2012 ம் ஆண்டில் - 153 பேர்
2013 ம் ஆண்டில்  - 158 பேர்
2015 ம் ஆண்டில் - 139 பேர்

2017 July மாதம் 31ம் திகதி வரையில் 151 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுட்டிக் காட்டும் அந்த ஆய்வில் தற்கொலை செய்து கொள்வோரில் அதிகமானோர் 40-55 வயதுக்குட்பட்ட பெண்களே எனவும் குறிப்பிட்டுள்ளது.

தற்கொலை செய்தோரின் அதிகமானோர், சமூகப் பிரச்சினையும், யுத்தப் பாதிப்பினால் உறவுகளை இழந்துள்ளமையும், எதிர்பார்ப்புக்கள் நிறைவேறா வேதனையுமே இவர்களை தற்கொலைக்கு துாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி - தமிழ்வின்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment