சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற, வடமாகாண சபை உறுப்பினருடனான சந்திப்பு.

தற்போது ஐ.நா. சபையின் கூட்டத்தில் கலந்து கொள்ள, சுவிஸ் வந்துள்ள, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா.கஜதீபனுடனான, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்றுக்கு "சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்" சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் "சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய" முக்கியஸ்தர்களுடன், பொதுமக்கள் சிலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

மேற்படி கலந்துரையாடல் சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) தலைமையில், பொருளாளர் திரு.அ.கைலாசநாதன் (குழந்தை) முன்னிலையில் ஒருநிமிட அமைதி வணக்கத்துடன் ஆரம்பமாகியது.

முதலில் வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா.கஜதீபன் அவர்களை, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய முக்கியஸ்தர்களான திரு.இ.இரவீந்திரன் (ஒன்றிய முன்னாள் தலைவர்), திரு.சி.இலடசுமணன் (ஒன்றிய கல்விப் பொறுப்பாளர்) ஆகியோர் பொன்னாடை போர்த்து வரவேற்க்க, தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் தலைமையுரையை தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா.கஜதீபன் அவர்களுடனான கலந்துரையாடல் மிகவும் சிறப்பாகவும், பல தெளிவுகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.ஆரம்பத்தில் தமிழ் அரசியல் கடசிகளுக்கு இடையே உள்ள விடயம், வடமாகாணசபையில் உள்ள விடயம், அரசியல் தீர்வு விடயம், குடிநீர் பிரச்சினைக்குரிய தீர்வு, கல்விப் (பாடசாலை)  பிரச்சினை, போன்ற பலவிடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தெளிவான பதில்கள் வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா.கஜதீபன் அவர்களினால் வழங்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து நிர்வாகசபை உறுப்பினர்களுடன், ஒன்றிய முக்கியஸ்தர்களான இரவீந்திரன், நிமலன், பாபு, கோபால், தயாபரன், குமார் போன்றவர்களினால் "புங்குடுதீவில் நிலைமை, அபிவிருத்தி, வடமாகாண சபையினால் செய்யக்கூடிய உதவிகள்" போன்றவற்றை குறித்து வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா.கஜதீபன் அவர்களுடன் கலந்துரையாடப் பட்டது.

மேற்படி கலந்துரையாடலில்.. 
*தொழில்களை மேம்படுத்தும் வகையில், தொழிற்சாலையொன்றை நிறுவுவது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் எனும் கோரிக்கையும்,
*புங்குடுதீவு மேற்கு சித்தி விநாயகர் வித்தியாலயத்துக்கு ஆய்வுகூடம் அவசியமா? அவசியமெனில் அதனை அமைத்துக் கொடுக்க வேண்டும் எனும் கோரிக்கையும்,
*வேலணை புங்குடுதீவுப் பாலத்தின் வீதியை அகலப்படுத்தி திருத்துவது எனும் முடிவின் நிலைமை என்ன? அதனை அகலப்படுத்த உடன் நடவடிக்கை எனும் கோரிக்கையும்,
* நன்னீர் கடலுக்கு போகாமல், புங்குடுதீவு வடகரை பகுதியில் அதாவது பழையதுறை பகுதியில் இருந்து கழுதைப்பிட்டி வரைக்கும் உள்ள பகுதியை உள்ளடக்கி வடகரை பகுதியில் அணை கட்டுவது குறித்தும் ஆலோசிக்குமாறும், இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கையும்,
** மிகமுக்கியமாக "கடல்நீரை நன்னீர் ஆக்கும் திடடம் குறித்தும்", குறிப்பாக நெடுந்தீவில் முன்னெடுத்துள்ள மேற்படித் திட்டவரைவு குறித்து ஆராய்ந்து, அறிக்கை தருமாறும் கேட்க்கப்பட்டதுடன் இத்திடடத்தை முன்னெடுக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க உதவ வேண்டுமெனும் கோரிக்கையும் "புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தினரால்" முன்வைக்கப்படடது.  

இதேபோல் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட, பூநகரியை சேர்ந்த திரு.முருகவேள் மாஸ்ரர் அவர்களினால், 
** "பூநகரி.முட்கொம்பன் அ.த.க.பாடசாலையில் நிலவிவரும் அதிபர்நியமனம் ஆசிரியர் பற்றாக்குறை என்பவற்றை நிவர்த்தி செய்யும்படியும், 
** பூநகரி ஒல்லாந்தர் கோட்டைக்கு (10.கிலோமீற்றர் சுற்றாடலிலுள்ள) யாழ்நகர் பக்கமாகவுள்ள கிராமங்களுக்கான குடிநீர் வசதிகளை கவனிக்குமாறும் அதற்காக கிராமங்களின் குளங்களில் மழைநீர் தங்கக்கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் உதாரணமாக குஞ்சபிட்டிக்குளம் போன்ற குளங்களை தூர்வார்வதன் மூலம் போருக்கு முன்னர் போன்று குளங்களில் மழைநீர்கள் தேங்கினால் கால்நடைகள் பயனடைவதுடன் நிலநீர் சேமிக்கப்பட்டு கிணற்று நீர்கள் நல்லநீராக மாறின் மக்கள் மீளக்குடியேறுவார்கள், பயிற்செய்கை, தென்னை வளர்ப்பு போன்றவற்றில் மக்கள் ஆர்வம்கொள்வர், எனவே அந்தந்த ஊர் மக்கள் இளைஞர்களுக்கு இதற்கான ஊக்குவிப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் அதற்கான புதிய திட்டங்களை மேற்கொள்ளுமாறும், 
"" பூநகரி வரலாற்று நூல்களில் இடம்பெறும் இடமாக இருந்தும் 6ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வரலாற்றுப்பகுதியில் இடம்பெற்றாலும் பூநகரிப் பாடசாலைகளில் கிளி. பூநகரி என அடுத்து ஊர்பெயருடன்தான் பாடசாலைகளின் பெயர்கள் இடம்பெற வேண்டும் போரின்பின் அப்படி இல்லாது கிளி முழங்காவில் அ.த.க.பாடசாலை என்றும் கிளி யெயபுரம் மகாவித்தியாலயம் என்றும் தவறாக இருந்து வருகின்றமை (இப்படிப் பல  பாடசாலைகளில்), எனவே கிளிநொச்சி கல்வித்திணைக்கள அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து பூநகரி கல்வி வலயத்திற்குள் வரும் எல்லாப் பாடசாலைகளும் "கிளி. பூநகரி" என்ற பெயரின் பின்னர் அந்தப் பாடசாலைகள் அமைந்திருக்கும் கிராமப்பெயர்கள் இடப்பெற்ற பெயர்களுடன் தான் பெயர்ப்பலகைகளிலும் அரசசேவைகளிலும் (நிர்வாக சேவைகளிலும்) இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றேன்" எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இவற்றுக்கு பதிலளித்த வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா.கஜதீபன் அவர்கள் "இவற்றில் தான் கூடிய கவனம் செலுத்துவதாகவும், தன்னால் நிறைவேற்றி தரக்கூடிய விடயங்களை உடன் முயற்சி செய்து நிறைவேற்றி தருவதாகவும், சகல விடயங்களையும் சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத் தலைவர் ரஞ்சன் அண்ணரிடம் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும்" தெரிவித்தார்.

இறுதியாக நன்றியுரை ஆற்றிய சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத் தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள், "குறுகியகால அழைப்பையும் பொருட்படுத்தாமல், கூட்டத்தில் உணர்வுடன் கலந்து கொண்ட ஒன்றிய அனைத்து உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றியெனவும், வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா.கஜதீபன் அவர்களிடம், நீங்கள் முன்வைத்த ஆலோசனைகள், கோரிக்கைகளை, எவராயினும் எழுத்து மூலம் முன்வைக்கப்படும் பட்ஷத்திலேயே நாம் அதில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும்" தெரிவித்தார்.

இறுதியாக அமைதி வணக்கத்துடன் கூட்டம் மாலை ஏழு மணி போல் நிறைவுக்கு வந்தது. நன்றி.

இவ்வண்ணம்...
திரு.செல்லத்துரை சதானந்தன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்-
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment