20 ஆவது திருத்தத்தை கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரித்தது ஏன்..??

சட்டமா அதிபர் உச்சநீதிமன்றத்துக்கு வழங்கிய உத்தரவாதத்துக்கு அமைய, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கல்வி அமைச்சருமான சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையில் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஊடகங்களுக்கு விளக்குகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்:

அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு மாகாண சபைகளின் அபிப்பிராயத்தை கோர நகல் சட்ட மூலம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டது. 20வது திருத்த நகல் எமக்கு திருப்தி அளிக்க வில்லை. ஏனெனில் இது மாகாணசபைகளின் அதிகாரங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாகவே இருந்தது.

மாகாணசபைகளை கலைக்கக் கூடிய அதிகாரம் அத்தோடு சகல மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்வதுவது, இந்த தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கின்ற அதிகாரம் என்பவற்றை பாராளுமன்றத்திற்கு வழங்கும் வகையில் இந்த திருத்தங்கள் அமைந்திருந்தன. ஆகவே மாகாணசபை மீது பாராளுமன்றம் ஆதிக்கம் செலுத்தும் இந்த சட்டத்தை நாங்கள் முதலில் ஆதரிக்கவில்லை. இச்சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற கருத்தை நாங்கள் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தி இருந்தோம்.

திருத்தங்கள் அவசியமாகிறது என்ற கருத்தை எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கும் தெரியப்படுத்தி இருந்தோம். அவ்விடயம் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் பேசப்பட்டு 20வது திருத்தச் சட்டத்தில் மேலும் புதிய சில திருத்தங்கள் சேர்க்கப்பட இருக்கின்றன. 20 ஆவது திருத்தத்திற்கான திருத்தங்கள் உயர்நீதி மன்றத்தில் சட்டமா அதிபரால் முன் வைக்கப்பட்டது.

ஏற்கனவே வந்த 20வது திருத்தத்தின் பின்னர் எம்மால் முன் வைத்த திருத்தங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு பாராளுமன்றம் மாகாணசபை அதிகாரத்தை கட்டப்படுத்தாதவாறு முன்வைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தங்கள் பாராளுமன்றத்தில் இடம் பெறவுள்ள 20வது திருத்தத்தின் இரண்டாவது வாசிப்பிலே உள்வாங்கப்படவுள்ளன. இந்த அடிப்படையிலே திருத்தபட்ட 20வது திருத்தத்துக்கு நாம் சாதகமாக வாக்களித்தோம் என்றார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment