முஸ்லிம் ச‌மூக‌ம் ஒற்றுமைப்ப‌ட‌ வேண்டிய‌து கால‌த்தின் க‌ட்டாய‌மாகும்.

முஸ்லிம் ச‌மூக‌த்தின் ஒற்றுமை அவ‌சிய‌ம் என்ப‌தை உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ள் உண‌ர்ந்த‌ போதும் அத‌ற்கான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் முன்னெடுக்க‌ப்ப‌டுவ‌தை காண‌ முடிய‌வில்லை.

முஸ்லிம்க‌ளின் ஒற்றுமை என்ப‌து வெறும‌னே அர‌சிய‌ல் கோஷ‌மாக‌ ம‌ட்டும் பார்க்க‌லாகாது. ஒற்றுமை என்ப‌து க‌ருத்திய‌ல் ரீதியாக‌வும், கொள்கை ரீதியாக‌வும் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட்டு அர‌சிய‌ல்ம‌ய‌ப்ப‌டுத்த‌ வேண்டும் என்ப‌தில் இல‌ங்கை உல‌மா க‌ட்சி அர்ப்ப‌ணிப்புட‌ன் செய‌ற்ப‌டுவ‌துட‌ன் இத‌ற்காக‌ ப‌ல‌ க‌ருத்துக்க‌ளையும், ஆலோச‌னைக‌ளையும் முன் வைத்து வ‌ருகிற‌து. அவ‌ற்றை செவியுறும் ச‌மூக‌ம் ஜீர‌ணிக்க‌ முடியாது ப‌ல‌ குற்ற‌ச்சாட்டுக்க‌ளையும், ப‌ழிப்புக்க‌ளையும் எம் மீது வைத்த‌ போதும் அடுத்த‌ ச‌ந்த‌திக‌ளாவ‌து உண‌ர்வ‌ர் என்ற‌ எதிர் பார்ப்பில் தொட‌ர்ந்து பேசி வ‌ருகிறோம். அவ‌ற்றை பின் வ‌ருமாறு அடையாள‌ப்ப‌டுத்த‌ முடியும்.

1. முஸ்லிம்க‌ள் ஒற்றுமைப்ப‌ட‌ வேண்டும் என்ப‌தை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு முஸ்லிமும் ம‌ற்ற‌ முஸ்லிமை வேறு அவ‌மான‌ப்ப‌ட்ட‌ப்பெய‌ர் கொண்டு அழைப்ப‌தில்லை என்ற‌ வைராக்கிய‌த்தை முத‌லில் த‌ன‌க்குள் ஏற்ப‌டுத்த‌ வேண்டும். அதாவ‌து இவ‌ன் சுன்ன‌த் ஜ‌மாஅத் முஸ்லிம், ஷீயா, வ‌ஹ்ஹாபி, த‌ப்லீக்கார‌ன், த‌வ்ஹீத்கார‌ன், ஜ‌மாஅத் இஸ்லாம்கார‌ன் என்ற‌ பெய‌ர்க‌ளை பாவிப்ப‌தை முற்றிலும் த‌விர்க்க‌ வேண்டும். யாராவ‌து பாவித்தால் அவ‌ருக்கு புத்திம‌தி சொல்லும் தைரிய‌ம் வ‌ர‌ வேண்டும்.

2. முஸ்லிம்க‌ள் த‌ம்மையும் ஏனைய‌ முஸ்லிம்க‌ளையும் முஸ்லிம்க‌ள் என்று ம‌ட்டுமே அழைக்க‌ ப‌ழ‌க‌ வேண்டும். அத்துட‌ன் இஸ்லாமிய‌ த‌ஃவாவை முஸ்லிம்க‌ளுக்குள் ம‌ட்டுப்ப‌டுத்தாது விரிவு ப‌டுத்த‌ வேண்டும்.

3. கொள்கையால் ஒற்றுமைப்ப‌ட‌ வேண்டும். ந‌ம‌து கொள்கையின் மூல‌ம் என்ப‌து குர் ஆனும் ஹ‌தீதுமாகும். அவை நேர‌டியாக‌ சொல்வ‌தை பின்ப‌ற்றுவோம் என்ற‌ உறுதி வேண்டும். நேர‌டியாக‌ சொல்ல‌ப்ப‌டாத‌வ‌ற்றில் நெகிழ்வு போக்கை க‌டைப்பிடிப்போம் என்ற‌ உறுதியான‌ கொள்கை வ‌ர‌ வேண்டும். க‌ருத்து வேறுபாடுக‌ள் மோத‌ல்க‌ளாக‌ இட‌ம‌ளிக்க‌ கூடாது.
4. குர் ஆன், ஹ‌தீதை அத‌ன் மூல‌ மொழியில் க‌ற்காதோர் இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ங்க‌ள் ப‌ற்றி ப‌கிர‌ங்க‌மாக‌ பேசுவ‌தையும், உப‌தேசிப்ப‌தையும் முற்றாக‌ த‌விர்க்க‌ வேண்டும். 

5. உல‌மாக்க‌ளை, வ‌ய‌தில் பெரிய‌வ‌ர்க‌ளை அவ‌ர் எந்த‌ நாட்ட‌வ‌ராக‌ இருப்பினும் அவ‌ர்க‌ளை ம‌திக்க‌ வேண்டும். அவ‌ரின் க‌ருத்துக்க‌ள் குர் ஆன் ஹ‌தீதுட‌ன் நேர‌டியாக‌ மோதாத‌வ‌ரை அவ‌ரை விம‌ர்சிப்ப‌தை த‌விர்ந்து கொள்ள‌ வேண்டும்.

5. முஸ்லிம்க‌ளிம் ஒற்றுமை என்ப‌து உல‌க‌ளாவிய‌ ரீதியில் அர‌சிய‌ல்ம‌ய‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட‌ வேண்டும். இத‌ற்கான‌ முய‌ற்சியில் உல‌மாக்க‌ள் ஈடுப‌டுவ‌த‌ன் மூல‌ம் ஒற்றுமையை நோக்கி ந‌க‌ர‌ முடியும்.

6. ச‌ர்வ‌தேச‌ மொழியொன்றை முஸ்லிம்க‌ள் த‌ம‌க்கு க‌டமையாக்கிக்கொள்ள‌ வேண்டும். ஒவ்வொரு முஸ்லிம் அற‌பு மொழியுட‌ன் த‌ன்னை ஈடுப‌டுத்திக்கொள்ள‌ வேண்டும்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment