நிந்தவூரில் 100 நிழல் தருமரங்கள் நடும் நிகழ்வு.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் சிந்தனையில் உருவான தேசிய உணவு உற்பத்தி வாரத்தின் இறுதி நாளை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச பிரதான வீதிகளின் இரு மருங்குகளிலும் 100 நிழல் தருமரங்கள் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மரநடுகையை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட கௌரவ அதிதிகள், உயர் அதிகாரிகள், ஏனைய உத்தியோகத்தர்கள், விவசாயப் பிரதிநிதிகள் போன்றோரினால் 100 மரங்களும் நடப்பட்டன.

இம்மரநடுகை நிகழ்வின் இறுதியில் அல்லிமூலை நெல் வயல் பிரதேசத்தில் விவசாயிகளையும், கால் நடை வளர்ப்போரையும் விளிப்பூட்டக் கூடிய விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்றும் இடம் பெற்றது.

இதில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய நிந்தவூர் பிரதேச கமநல சேவை மத்திய நிலைய மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.ஹார்லிக் கருத்து வெளியிடுகையில்;:- 'இன்று எம்மவரிடையே அதிகமாகக் காணப்படும் சிறுநீரக நோய், புற்று நோய், பெண்களுககான மூட்டு வாதம்' போன்றவற்றிற்குக் காரணம்  நாம் உண்ணும் உணவிலுள்ள நச்சுத் தன்மையே ஆகும். எனவே நாம் நஞ்சற்ற இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைத் தெரிவு செய்து உண்ணவேண்டும். எப்போதும் இயற்கையோடு ஒன்றித்து வாழவேண்டும். இயற்கையை வளர்த்து, அதனை இரசிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நோயற்ற மனநிறைவுடைய சுகதேகியாக வாழ முடியும்' எனத் தெரிவித்தார்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment