3வது வருடத்தில் கால்பதித்துள்ளது மக்கள் நண்பன் இணையத்தளம்.


அன்புக்குரிய நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் மற்றும் வணக்கம்.

உங்கள் அத்தனை பேரது அமோக ஆதரவினைப் பெற்று மூன்றாவது வருடத்தில் மக்கள் நண்பன் இணையத்தளம் காலடியெடுத்து வைக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றோம். உங்கள் அனைவரது ஒத்துழைப்பின்றி நிச்சயம் மூன்று வருட காலம் பயணித்திருப்பது என்பது கடினமானதொன்றே இந்தத் தருணத்தில் வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


ஏனைய இணையத்தளங்கள் போன்று போட்டி போட்டுக் கொண்டு இலங்கையில் முதல்தர இணையத்தளமாக ஆக வேண்டும் என்ற அவசியம் பேராசை ஒரு துளியளவேணும் எமக்கு இல்லை மாறாக ஏதாவது நல்ல விடயங்களை மற்றவர்களை விட வித்தியாசமாக வாசகர்களுக்கு வழங்கினால் போதும் என்ற உயரிய மனப்பாங்கிலேயே நாங்கள் பயணிக்கின்றோம்.

அதன் அடிப்படையில்தான், அரசியல் செய்திகளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் வழங்காது சுயதொழில் சார்ந்த ஊக்குவிப்புப் பதிவுகள், மருத்துவம் சார்ந்த விடயங்கள், மக்களுக்கான விழிப்புணர்வு விடயங்கள், பொதுமக்களது பிரச்சினைகள் என மிக பயனுள்ள செய்திகளோடும் தகவல்களோடும் நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த தருணத்தில் ஒரு உயர்ந்த உள்ளம் கொண்ட ஒருவருக்கு நான் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். முகநுால் வாயிலாக ஏதோ என்னால் முடிந்த விடயங்களை எழுதிக் கொண்டிருந்த என்னை ஊக்கப்படுத்தி இணையத்தள வாயிலாக நல்ல விடயங்களை பகிர்ந்து கொள்ள, அதன் மூலம் எழுத வைத்த அன்புக்குரிய சகோதரர் சம்மாந்துறை மாஹிர் மொஹிடீன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

அத்தோடு என்னோடு சேர்ந்து பயணிக்கும் எனக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் எனது நண்பர்களான றுமைஸ் (மக்கள் தோழன்) மற்றும் இர்சாட் போன்றோருக்கும் இந்தத் தருணத்தில் எனது உள்ளார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இப்படிக்கு
மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment