சம்மாந்துறை வைத்தியசாலையில் கொண்டாடப்பட்ட சிறுவர் தின நிகழ்வு.

தகவலுக்கு நன்றி - 

Sma Base Hospital Sammanthurai 


உலகின் முதலாவது சிறுவர் தினம் 01/10/1955 ல் சர்வதேச சிறுவர் நலன்புரி ஒன்றியத்தின் அனுசரணையுடன் ஜெனிவாவில் நடைபெற்றது. சிறுவர் தினம் என்பது வெறுமனே பரிசுகளை சிற்றுண்டிகளையும் பெறும் வைபவம் என எண்ணாமல் சிறுவர்களின் நலன் கருதி கொண்டாடப்படும் தினமாகும்.

சிறுபிள்ளைகளை போதை வஷ்து பாவனையிலிருந்து தடுப்பதும் பாலியல் துஷ்பிரயோகம், வேலைக்கு அமர்த்துதல், வன்மையான முறையில் நடத்துதல் ,போன்றவற்றை தடுத்தல் நமது கட்டாயக் கடமையாகும்.

சிறுவர்களின் கவனிக்கப்படாத மிகப் பெரிய பிரச்சினை நிறை கூடக் காணப்படல் ( Obesity) , இதற்கு பிரதான காரணம் சிறுவர்களின் ஒழுங்கற்ற உணவுப் பழக்கம். பாடசாலைகளில் பகல் உணவாக Ice cream, chocolate, வீட்டில் TV, Cartoon,phone பார்த்துக் கொண்டு நொருக்குத் தீணிகளும் உணவும் உண்ணும் பழக்கம் , போன்றன உடல்நிறையை அதிகரிக்கின்றது. எனவே அன்பார்ந்ந பெற்றோர்களே நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவு செய்து சிறுவர் விளையாட்டுப் பூங்காக்களுக்கு கூட்டிச் சென்று சந்தோசமாக சமூகத்துட பழக வாய்பளித்து விளையாடவும் இடமளியுங்கள்.

இவ்விடத்தில் பாரதியாரின் பாட்டு ஞாபகத்துக்கு வருகின்றது" காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு என்று பழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா" எனவே பிள்ளைகளுக்கு விளையாட்டையும் ஊக்குவித்து உற்சாகமான எதிர்கால சந்ததியினரை உருவாக்குவோம்.


இந்த வகையில் சர்வதேச சிறுவர் தினத்தை ஒட்டி " தாய் தந்தை முதியோரின் அன்பு பாசப் பிணைப்பினூடாக சிறுவர்களை அவர்களது அதிசயமிக்க உலகிற்கு கொண்டு செல்வோம்" என்ற தொணிப் பொருளில்  சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையி இன்று சிறுவர் தின நிகழ்வுகள் இடம் பெற்றது.

கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்தும் தவறாது சிறுவர் தினத்தைக் கொண்டாடிவரும் சம்மாந்துறை ஆதாரவைத்திய சாலையின் சிறுவர் விடுதியும் முதிராக் குழந்தைப் பிரிவும் இவ்வருடமும் சிறுபிள்ளை வைத்தியர் நிபுணர் இல்லாத போதும் சிறுவர் தினத்தை விமர்சையாகக் கொண்டாடியது. 

இச் சிறுவர் தின நிகழ்வின் கதாநாயகர்களான சிறுவர்கள் வைத்தியசாலையின் ,சிறுவர் கிளினிக்கிலிருந்தும் விடுதியிலுருந்தும் பங்குபற்றியிருந்தார்கள்.

இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr.YBM அப்துல் அஷீஸ் அவர்களும், விசேட அதிதிகளாக Dr. MMM நௌசாட், தாதியர் பரிபாலகர் TL. ரசூல் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

Dr YBM அப்துல் அஷீஸ் அவர்கள் உரையாற்றுகையில்,

சிறுவர்கள் மார்க்கரீதியாக வளர்க்கப்படல் வேண்டும், தாயானவள் தனது பிள்ளைக்கு இஸ்லாம் கூறிய படி தூய எண்ணத்துடன் தனது எண்ணங்களை TV பார்த்தல் போன்றவற்றால் சிதறடிக்காமல் இரண்டு வருடங்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவானால் அப்பிள்ளை சிறந்த பிள்ளையாக வர வாய்ப்பிருக்கின்றது மட்டுமல்லாமல் தாய்ப்பாலூட்டல் சிறந்த கருத்தடை முறையாகவும் இருக்கின்றது. எனவே மார்க்க அறிவுள்ள சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Dr.MMM. நௌசாட் அவர்கள் உரையாற்றுகையில்,

இவ்விழாவின் தொணிப்பொருளுக் கேற்ப ஒவ்வொரு சிறுவர்களும் உலகில் உள்ள பொருள்களை வினோதமாகவே பார்க்கிறார்கள். அவர்களுக்கு இவ்வுலகமொரு விந்தை உலகமாகவே தென்படும். அவர்கள் விரும்பிக் கேற்பதை அவர்கள் பாணியில் நாம் விட வேண்டும். இதைத்தான் போட வேண்டும் செய்ய வேண்டும் என திணிக்கலாகாது என உரையாற்றினார்.

தாதியர் பரிபாலகர் TL. ரசூல் அவர்கள் உரையாற்றுகையில்,

ஏன் October முதலாம் திகதியை உலக சிறுவர் தினமாக பிரகடனப் படுத்திக் கொண்டாடுகிறார்கள்.என்ன காரணம், ஏனென்றால் சிறுவர்கள்தான் நாளைய எதிர்காலம். அவர்களின் கையில்தான் நாட்டின் எதிர்காலமே தங்கியிருக்கு. எனவே சிறந்ததோர் ஆரோக்கியமான சிறுவர்களை உருவாக்க வேண்டும். நோயுள்ள சிறவர்கள் இருந்தால் அவர்களுடன் பெற்றோர்களும் தங்களை அர்பணிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. எனவே நோயற்ற சிறந்த சிறுவர்களை உருவாக்கிக் கொடுப்பது நமது எதிர்காலத்தை வளமுடையதாக மாற்றும். தற்போது சிறுபிள்ளை வைத்திய நிபுணர் இல்லாத போதும் நமது சிறுவர் விடுதியும் முதிரா குழத்தைப் பிரிவும் சிறந்த முறையில் தனது சேவைகளை வழங்கி வருவது பாராட்டப்பட வேண்டிய விடயம் என உரையாற்றினார்.

குறித்த நிகழ்வின் நன்றியுரையை தாதிய உத்தியோகத்தர் முஹம்மட் சபீர் அவர்கள் வழங்கினார்கள்.

இவ்விழாவை ஏற்பாடு செய்து நடாத்திய Dr. AL.Risfan, மற்றும் சிறுவர் விடுதியிலுள்ள Dr. Sharmila, Dr.Sulochana, சிறுபிள்ளை விடுதி, முதிராக் குழந்தை பிரிவிலுள்ள பொறுப்புத் தாதியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் SMA சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.


" நாளைய உலகம் நம் சிறுவர்களின் கைகளில்"Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment