சம்மாந்துறையின் இலக்கிய படைப்புக்கள் அனைத்தையும் ஆவணமாக்க நடவடிக்கை.

சம்மாந்துறையின் எண்மான ஆவணவாக்கல் 
Digital Documentation of Sammanthurai Welfare & Development Council 

சம்மாந்துறை பல்வகையான ஆளுமைகளைக் கொண்ட பிரதேசமாகும். இருந்தபோதிலும், எமது ஆளுமைகளின் ஆக்கங்களும், எமது வரலாற்று ஆவணங்களும் போதிய அவதானத்துடன் முழுமையாக ஆவணப்படுத்தப்படாமல் இருப்பது எமது துரதிஷ்டமே. இன்றைய எமது ஆக்கங்கள் நாளைய வரலாற்றுச் சான்றுகளாக அமையக்கூடியன. இலக்கியங்களும் எமது பிரதேச பண்பாட்டுத் தொகுப்புகளும் ஆவணப்படுத்தப்படவேண்டியதும், பாதுகாக்கப்படவேண்டியதும் நிகழ்காலத்தின் அவசியமான தேவையொன்றாகும்.


எமது எதிர்கால சந்ததிகளின் தேடலுக்கும், இருப்பிற்கும் புலமைத்துவப் பங்களிப்பினை நல்க நாம் மனங்கொள்ள வேண்டும். அந்த வகையில் சம்மாந்துறை நலன்புரி மற்றும் அபிவிருத்திக்கான பேரவை தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் நூலகம் பகுதியூடாக ஆவணப்படுத்தல் முயற்சியொன்றினை ஆரம்பித்துள்ளது.

இதில் சம்மாந்துறை எழுத்தாளர்களின் நூல்கள், ஆவணங்கள் போன்றவற்றை எழுத்தாளர் அல்லது பதிப்புரிமையாளரின் அனுமதியுடன் அவர்களின் புலமைச் சொத்துரிமையை (Intellectual Property Right) பேணிக்கொண்டு ஆவணப்படுத்த எண்ணியுள்ளோம்.

ஆக்கங்கள் எவ்வாறான வகைப்பாட்டுக்குள்ளும் அடங்கலாம்

1. சம்மாந்துறை பற்றிய ஆவணங்கள் 
2. சம்மாந்துறை எழுத்தாளர்களின் படைப்புகள்
3. வரலாற்று நூல்கள்
4. கவிதைத் தொகுப்பு
5. சிறுகதைத் தொகுப்பு
6 பத்திரிகைக் கட்டுரைகள்
7. ஆய்வுகள்
8. மார்க்க நூல்கள்
9. ஆண்டறிக்கைகள்
10. அரச, தனியார், அரச சார்பற்ற நிறுவனங்களின் தொகுப்புகள்
11. கல்வி சார் நூல்கள் (புலமைப்பரிசில், சாதாரண தர, உயர்தர)
12. கடந்தகால மற்றும் மாதிரி வினாத்தாள்கள்
13. பொது விழிப்புணர்வுப் பிரசுரங்கள்
14. அரிய பாதுகாக்கப்படவேண்டிய ஆவணப்பிரதிகள்
15. ஏனையவை


எனவே உங்களது ஆக்கங்கள் மற்றும் ஏனைய எழுத்தாளர்களின் ஆக்கங்களை அவர்களது அனுமதியுடன் வழங்கி உதவுமாறு வேண்டுகின்றோம்.

மென்பிரதியாக உள்ள ஆவணங்களை swdc.str@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.


ஏனைய நூலுருவில் மாத்திரம் (Hard copy) உள்ள ஆக்கங்களை எம்மிடம் ஒப்படைத்தால் நாம் அதனை ஸ்கேன் (Scan), செய்த பின் உரியவரிடம் மீள ஒப்படைக்கப்படும்.

இதுவரை பதிவேற்றப்பட்டுள்ள ஆவணங்களை www.swdc.lk/library/ என்ற இணையத்தள முகவரியூடாக அணுக முடியும்.

மேலதிக தகவல்களுக்கு : 

தொலை பேசி :
+94771607490
+94718693282
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment