சம்மாந்துறை பௌஸ் மாவத்தை பிரதேச இவ் வீதி தொடர்பாக மக்கள் கவலை.

சம்மாந்துறை உடங்கா - 02 கிராம சேவகர் பிரிவில் உள்ள பௌஸ் மாவத்தை 1ம் குறுக்குத் தெரு தொடர்பில்  மக்கள் நண்பன் இணையத்தளத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த இவ் வீதியினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை தினம்தோறும் சந்திப்பதாகவும், மழைக்காலம் வந்து விட்டால் சொல்லொன்னா துன்பங்களுக்கு ஆளாகுவதாகவும்  இவ் வீதியினை ஒட்டி வாழும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ் வீதி தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் என புடைசூழ வந்து பார்வையிட்டதுதான் மிச்சம் அவர்களால் எதுவும் நடைபெறவில்லை என மக்கள் புலம்புகின்றார்கள்.

சம்மாந்துறையில் பிரதான முக்கிய வீதிகள், குறுக்குத் தெருக்கள் என பல வீதிகள் திருத்தப்பட்டும் ஏன் இவ்வாறான பின்தங்கிய பிரதேச வீதிகள் மாத்திரம் இன்னும் திருத்தப்படவில்லை என மக்கள் கேள்விக்கு மேல் கேள்வி கேட்குகின்றார்கள்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கௌரவ எம்.ஐ.எம் மன்சூர் அவர்களது கனத்திற்கும், வீதித் திருத்தம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் இப் பிரதேசவாசிகள் சார்பாக மக்கள் நண்பன் இணையத்தளம் இச் செய்தியினை பிரசுரிக்கின்றது.





Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment