சமஷ்டி மற்றும் வ/கி இணைப்பிற்கு முஸ்லிம் சிவில் தலைமைகள் ஆதரவு இல்லை.

(இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாக இருத்தல், இலங்கையின் மாகாணங்கள் ஒன்பது மாகாணங்களாக இருத்தல், எல்லா மக்களுக்கும் சமமான அதிகாரப் பகிர்வை வழங்குதல், இன விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ளுதல்)

தேசிய ஷூரா சபை புதிய அரசியலமைப்பு தொடர்பான தமது பரிந்துரைகளை 31/03/2016 சமர்ப்பித்தது. அது தொடர்பான செய்தியே கீழே இருக்கிறது. இனி தற்போதைய அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறை தொடர்பான விவ்கரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது. பார்வையாளர்களாக அன்றி பங்காளர்களாக முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகளும் சிவில் சன்மார்க்க மற்றும் அரசியல் தலைமைகளும் தேசிய ஷூரா சபையின் நகர்வுகளிற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வருதல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடமையாகும்.


இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் துறைசார்நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட தேசிய ஷூரா சபை நாட்டின் புதியஅரசியலமைப்பு மாற்றம் தொடர்பான தமது பரிந்துரைகளை இன்று(31/03/2016) மதியம் சமர்ப்பித்துள்ளது.


கொழும்பு விசும்பாயாவில் அமைந்துள்ள அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்கள்யோசனைகளைப் பெறும் குழு செயலகத்தில் வைத்து அதன் தலைவர் லால் விஜய நாயக்கவிடம்அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான தமது பரிந்துறைகளை கையளித்துள்ளது.

இவ் அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வில் தேசிய ஷூரா சபையின் தலைவர் அல்ஹாஜ் தாரிக் மஹ்மூத்,பொதுச்செயலாளர் சட்டத்தரணி மாஸ் எல். யூஸுப், கலாநிதி மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் மற்றும்நியாஸ் எம். அபூபக்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

"அனைத்து பிரஜைகளுக்கும் ஜனநாயக உரிமைகளை வலுப்படுத்த, சகவாழ்வு மற்றும் தேசியநல்லிணக்கத்தை ஊக்குவித்தல், நாட்டு மக்களின் சுதந்திரத்தையும், அடிப்படை உரிமைகளையும் உத்தரவாதப்படுத்தல், சுதந்திரம், அடிப்படை உரிமை மீறல்களுக்கான பரிகாரங்களை வழுப்படுத்தல், பொறுப்புக் கூறல் மற்றும் நம்பிக்கையான ஆட்சியினை உறுதிப்படுத்தல்.."

"இலங்கை ஒரு ஒற்றையாட்சிநாடக இருத்தல், இலங்கையின் மாகாணங்கள் ஒன்பது மாகாணங்களாக இருத்தல், எல்லா மக்களுக்கும் சமமான அதிகாரப் பகிர்வை வழங்குதல், இன விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ளுதல்"

என்பன தேசிய ஷூரா சபை சமர்பித்த புதியஅரசியலமைப்பு மாற்றம் தொடர்பான முன்மொழிவு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அதன்தலைவர் தலைவர் அல்ஹாஜ் தாரிக் மஹ்மூத் தெரிவித்தார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment