இவரை வைத்துக் கொண்டு முஸ்லிம் காங்ரஸ் காத்தான்குடியில் எதனையும் சாதிக்கப் போவதில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு காத்தான்குடிப் பிரதேசம் அரசியல்ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் முஸ்லிம் வாக்காளர்களைக்கொண்டது. கடந்த சிலவருடங்களாக முஸ்லிம் காங்கிரசுக்கு இப்பிரதேசத்தில் வாக்குகளைத் தக்கவைப்பதற்கு பலத்த சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. இதற்குக் காரணம் அப்பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மு.கா கொள்கை பரப்பு செயளாலர் ULM முபீன் .

இவரது செயற்றிறன் அற்ற மந்தமான அரசியல் செயற்பாடுகளால் கட்சி தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.எதிர்வரும் காலங்கள் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் முபீன் போன்ற செயலூக்கமற்ற நபர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பதவிநீக்கம் செய்துவிட்டு அவ்விடத்துக்கு மக்களின் அபிமானம் ,நன்மதிப்புக்களைப் பெற்ற நேர்மைமிக்கவர்களை கொண்டுவர வேண்டும்.இதற்கு பொறுத்தமானவர் சிப்லி பாரூக் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

இல்லாதுபோனால் காத்தான்குடியில் காங்கிரசு முழுமையாக துடைத்தெரியப்படக்கூடிய சாத்தியம் உண்டு.

சகோதரர் ஷிப்லி பாரூக் அவர்கள்  மறைந்த தலைவர் அஷ்ரப் தேக்கி வைத்த நல்லுள்ளங்களை இணைத்துக்கொண்டு ,சரிந்துபோயுள்ள கட்சியின் செல்வாக்கை தமது சொல்வாக்கின்மூலம் கட்டியெழுப்ப எடுக்கின்ற முயற்சிகள் அனைத்துக்கும் பெரும் முட்டுக்கட்டையாக கொள்கை பரப்புச் செயலாளர் இருந்துவருகிறார்.

கட்சியின் ஆரம்பகாலப் போராளி என்பதற்கப்பால் இவர் சாதித்தது எதுவுமில்லை, தற்போதைய தலைவரது அமைச்சின் இனணப்பாளர் என்று கூறுவதைத்தவிர தனிப்பட்ட வகையில் jp உறுதிப்படுத்தல் certified கடிதம் வாங்குவதற்குக்கூட அருகதையற்றவர் .அதுமட்டுமின்றி மக்கள் தங்களது தேவைகள்,பிரச்சினைகளை முன்வைப்பதற்கு  அவரை நாடுவதுமில்லை, அவராக முன்வந்து மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து தீர்வு பெற்றுக்கொடுப்பதுமில்லை.One Of The Useless Politician Ever In Kky History.இவர் பெறுமதிவாய்ந்த பதவியில் அமர்ந்திருக்கும் பெறுமதியிழந்த ஓர் பழமையான போராளி என்பதே உண்மை.

இப்படி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் இவர் போன்ற நபர்களை வைத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரசினால் குறைந்தபட்சம் கமநல சங்கத் தேர்தலில்கூட போட்டியிட்டு ஒரு ஆசனத்தைப் பெறமுடியாது..

சகோதரர் ஷிப்லி பாரூக் நபிவழி மார்க்கம் தொடரும் ஒரு நேர்மையான மனிதர் என்பதுடன் அவருடைய வித்தியாசமான அரசியல் அணுகுமுறை கலாச்சாரத்தினால் இளைஞர்கள் மத்தியில் இவருக்கான ஆதரவு அதிகரித்துவருகிறது. இதை உணர்ந்துகொண்டே சகோதரர் ULM. முபீன் இவற்றைத் தடுப்பதற்கு பல்வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பதை அவருடைய அண்மைக்கால நடவடிக்கைகள் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. காத்தான்குடியில் கட்சிரீதியான முன்னெடுப்புக்களிலும்,உள்ளூர் அபிவிருத்திப் பணிகளிலும் இவரது எந்தப்பங்களிப்பையும் அன்மைக்காலமாக காணமுடியவில்லை.காத்தான்குடி பஸ்நிலைய கழிப்பறை ஒன்றை தவிர.

முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடியில் மீளவும் செல்வாக்குப்பெற துடிப்புமிக்க, ஆளுமைகொண்ட இளைஞர் அல்லது ஷிப்லி பாரூக் போன்ற மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவரிடம் கட்சிப் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படவேண்டும்.இது தொடர்பில் மேலிடம் அவசரமாகக்கூடி முடிவெடுக்கவேண்டும்.

தற்காலத்து இளைஞர்களின் மன எண்ணங்கள்,உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அரசியல் வியூகங்கள் ,தூரநோக்குடன் வித்திடப்படும் அரசியல் கலாசாரத்திற்கும் இவர்களால் ஈடுகொடுக்கமுடியாது. 90 களுடன் வழக்கொழிந்து விட்டது இவர்களின் குறுகிய அரசியல் சிந்தனைகள். 

தனது அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்து மக்கள் புறக்கணிக்கிறார்கள் .இனியும் அதற்கு நாம் தகுதியில்லை என உணர்ந்து தாமாகவே பதவியிலிருந்து ஒதுங்கி திறமையானவருக்கு வழிவிடுவது சிறந்ததும் தனக்கும்,கட்சிக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்.

செய்திப்பட உதவி - மடவளை.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment