தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தில் நிகழ்வுகள்.

(எம்.எம்.ஜபீர்)

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள அமீர் அலி பொது நூலகத்தில் பாடசாலை மாணவர்களுடையிலான போட்டி நிகழ்வுகளும், மற்றும் வாசகர்களுக்காக நவீன முறையிலான  விசேட தொழில்நுட்ப பயிற்சிகளும் இடம்பெறவுள்ளதாக சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தின் நூலகரும் செயற்குழுவின் செயலாளருமான ஐ.எல்.எம்.ஹனீபர தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச சபை செயலாளரும் விசேட ஆணையாளருமான ஏ.ஏ.சலீம் தலைமையில் ஒக்டேபர் 01ஆம் திகதி இன்று தொடக்கம் 31ஆம் திகதி வரையான காலத்தில் பாடசாலை மாணவர்களுடையிலான கட்டுரை, சித்திரம் போன்ற போட்டிகள் இடம்பெறுவதுடன் வாசிப்பு மாதத்தினை வலியுறுத்தி பாடசாலை மாணவர்களினால் விழிப்புணர்வு பேரணி, சிரமதானம், நூலகங்களின் தகவல் மற்றும் மூலவளங்கள் பற்றிய விழிப்பூட்டும்  துண்டுப் பிரசுரம், இலவசமாக நூலகத்திற்கு 100 அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்ளல், வாசகர்களுக்கு இணையப் பாவனை தொடர்பான பயிற்சி, என்பன இடம்பெறுவதுடன் இம்மாத இறுதியல் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுப் பொதிகள், மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள அனைத்து நூலகங்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள போட்டி நிகழ்வுகள் அனைத்தும் அமீர் அலி பொது நூலகத்திலே இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டிலிருந்து ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் தேசிய நூலக ஆவணங்கள் சேவைகள் சபை  சகல பொது நூலகங்களினையும் அறிவுறுத்தியுள்ளதுடன், நடைமுறைப்படுத்தியும் வருகின்றது. மக்களின் வாசிப்புப் பழக்கத்தை அபிவிருத்தி செய்தல், நூலக வளங்கள் மற்றும் சேவைகளை நவீனப்படுத்தல் போன்றன இதன் குறிக்கோளாக காணப்படுகின்றது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment