சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தில் இடம்பெற்ற கணினி தொழிநுட்ப பயிற்சி செயலமர்வு.

(எம்.எம்.ஜபீர்)

தேசிய வாசிப்பு மாத்தை முன்னிட்டு சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தில் வாசகர்களுக்கான கணினி தொழிநுட்ப பயிற்ச்சி செயலமர்வு  இன்று செவ்வாய்கிழமை நூலக கணினி ஆய்வு கூடத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபை செயலாளரும் விசேட ஆணையாளருமான ஏ.ஏ.சலீமின் வழிகாட்டிலில் சம்மாந்துறை அமீர் அலி நூலகர்களான ஐ.எல்.எம்.ஹனீபா, எம்.எம்.முனவர், வாசகர்கள், நூலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் இச் செயலமர்வில் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப கற்கை நெறியை பூர்த்தி செய்த  எம்.எஸ்.தஸ்னீம் வளவாளராக கலந்துகொண்டு வாசகர்களுக்கு கனினி வலைமைப்பு தொடர்பாக  விளக்கமளித்தார்.

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள நூலக வாசகர்களுக்கு கணினி தொழிநுட்பம் ஊடாக நூலக சேவையை பெற்றுக்கொள்வதற்காக இச் செயலமர்வு நடைபெற்றமை குறிப்பிடதக்கது. 




Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment