வேலை செய்து குன்றிப் போன சம்மாந்துறை வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைகூட கட்டில்.


சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையை அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொது மற்றும் தளவைத்தியசாலைகளுடன் ஒப்பிட வைப்பதும், மாவட்ட , மத்திய மருந்தகங்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவதுமாகிய சத்திரைசிகிச்சைக் கூடத்துக்கு சத்திர சிகிச்சைகூட கட்டிலானது இதயம் போன்றது. 

சத்திரசிகிச்சைக் கட்டிலானது சத்திரசிகிச்சைக்கு ஏற்ப நோயாளிகளின் நிலைகளை மாற்றி சத்திர சிகிச்சையை இலகுபடுத்திக் கொடுக்கும் வல்லமை கொண்டதாக இருக்கும். 

தற்போது பிரதான சத்திர சிகிச்சை அறையில் காணப்படும் கட்டிலானது கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக முழு மூச்சாக வேலை செய்து முதுகு வலி வந்த மாதிரி Hydrolic அடிப்பட்டு நிலை குலைந்து காணப்படுகின்றது.

சத்திர சிகிச்சைகளுக்கு நேரம் நிர்ணயிக்க முடியாது . அரை மணியிலிருந்து ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலும் தொடர்ந்து செய்ய வேண்டி ஏற்படும். 

சத்திரசிகிச்சையின் ஆரம்பத்தில் நிலைகளை சரிசெய்து ஆரம்பிக்கும் போது சிறுது நேரம் செல்லும் போதே கட்டிலின் நிலை மாற்றமடைவதால் சத்திர சிகிச்சை நிபுணர்களுக்கு முதுகு வலி, உடம்பு வலி ஏற்படுவதோடு தொடர்ந்தும் அடுத்தடுத்த சத்திரசிகிச்சைகளை செய்வதற்கு விருப்பமற்றுப் போகின்றது. 

எனவே இதற்கான தீர்வை நாம் எடுக்க வேண்டும். தரம் போதாது வளம் போதாது என்று எப்போதும் 

எடுத்ததற்கெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்காமல் நவீன மயமாக்கப்பட்ட புதிய தொரு கட்டிலை அல்லது பாவிக்கப்பட்ட நவீன கட்டிலொன்றை நாம் பெறுவோமானால் நமது மக்களுக்காகச் செய்கின்ற பேருதவியாகவிருக்கும். 

New modified Theatre Table - 2million

Second hand Theatre Table -1million 

எமதூரின் முப்பெரும் சபைகள், எம் மக்கள் பிரதி நிதி கௌரவ MIM மன்சூர் MPஅவர்கள் , நமது வைத்தியசாலையின் நலன்விரும்பிகள் அனைவரையும் இவ்விடயம் பற்றி கருத்தில் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.

" வைத்தியசாலைக்கு உதவுவது நமது மக்களுக்கு உதவுவது மாதிரி"


வைத்தியர்,
தர முகாமைத்துவம்,
சம்மாந்துறை
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment