சம்மாந்துறையில் “தேசிய உணவு உற்பத்தி புரட்சி” வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு.

அன்சார் காசீம்

நாட்டு மக்களை வறுமையிலிருந்து விடுவித்து நாட்டின் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தி நாளை தலைமுறைக்கு சுவீட்சமான ஒரு நாட்டை கட்டுயெழுப்புவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படும் தேசிய உணவு உற்பத்தி புரட்சி வேலைத்திட்டத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் புரண ஒத்துழைப்பினை வழங்கி தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்திற்கு புத்துயிரூட்ட வேண்டும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

இலங்கையின் விவசாய துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படும்”தேசிய உணவு உற்பத்தி புரட்சி” வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.முகம்மட் ஹனீபா தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும உரையாற்றுகையிலே – வறுமையை ஒழித்து நாட்டை மீண்டும் தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கிக் கொண்டு செல்லும் “தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அரசியல், இனம், சமயம் மற்றும் கலாசார பேதங்களின்றி நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும்

தேசிய உணவு உற்பத்தி மறுமலர்ச்சி, காலநிலை மாற்றத்தினால் சவால்லுக்குட்பட்டுள்ள உணவு உற்பத்தி தேசிய செயற்திட்டத்தை புது தெம்புடன் தொடர்ச்சியான முன்னெடுப்பதனையும், நாட்டில் விவசாயம் தொடர்பான எழுச்சியை உருவாக்குவதனையும் இலக்காக கொண்டுள்தாக ஜனாதிபதி அவர்கள் நாடு முழுவதிலும் இத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.

வரட்சியினால் அழிந்துள்ள பயிர்நிலங்களில் மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வந்து விவசாயிகள் உணவு உற்பத்தியினை மேம்படுத்த வேண்டும். நாம் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக புவிவெப்பமடைதலானது இன்று புதகரமாகி வருகிறது. வெப்பநிலை அதிகரிப்பு, கடல்மட்ட உயர்வு, நீர் பற்றாக்குறை, நோய்கள் அதிகரிப்பு போன்ற பாதிப்புக்கள் இதனால் ஏற்படுகின்றது. சுற்றுச்சூழல் மாசுபடுவதே புவி வெப்பமடைவதற்கு முக்கிய காரணமாகும். 

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், புவி வெப்பமடைவதை குறைக்கவும் நமது அன்றாட வாழ்க்கை முறையில் மாற்றம் தேவையாகும். அனைவரும் தத்தம் வீடுகளிலிருந்தே சூழல் மாசடைவதை தவிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோமாயின் ஓரவேளனும் எம்மால் சூழலைப் பாதுகாக்க முடியும்.

எல்லோருமே ஆரோக்கியமற்ற ஒரு சூழலை வரவழைத்துக்கொண்டள்ளோம். உணவை நஞ்சாக மாற்றிக்கொண்டுள்ளோம். நிலத்தடி நீரை நாங்கள் நம்பிக் குடிக்க முடியாதுள்ளது. இவ்வாறான மிகக் கஷ்டமான ஒரு தர்மசங்கடமான, ஆபத்தான ஒருவாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 
இதனை நவீன தொழில்நுட்பமும், இயந்திரமயமான வாழ்க்கை முறைகளும்தான எமக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இவைகளிலிருந்து பாதுகாப்புப் பெறவேண்டும். அதற்கு அனைவரும் தங்களது வீடுகளில் வீட்டுத்தோட்டங்களை பயிர்களை அல்லது பழக்கன்றுகளையாவது நட்டி ஆரோக்கியமான உணவுகளை உற்பத்தி செய்வதற்கு ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்.


எனவே, சுய உற்பத்தியின் மூலம் உணவில் தன்னிறைவு என்ற அரசின் இலக்கு வெற்றியடைய நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு கரம் சேர்க்க வேண்டும. நாடு மீண்டும் செல்வம் கொழிக்கும் புமியாக மாற வேண்டும். என்றார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.எம்.சலீம், விவசாயப் போதனாசிரியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், கிராம சேவையாளர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment