சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரிக்கு தொழில்நுட்பக் கல்லுாரி பணிப்பாளர் குழு விஜயம்.

அன்சார் காசீம்.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் அழைப்பினை ஏற்று சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரிக்கு தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழுவினர் இன்று (03) விஜயம் செய்துள்ளனர்.

இந்த விஜயத்தின்போது தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் ஜீ.எச். அமரசூரிய, பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) ஏ.ஜீ. அனுலாவதி, பிரதிப் பணிப்பாளர் (அகடமி- ஆங்கிலம்) பி.எம்.சி.என். பாலசூரிய, அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளர் எம்.எம். கையூம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இணைந்திருந்தனர்.பணிப்பாளர் குழுவினரோடு, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் எம்.எம். ஹஸன், போதனாசிரியர்கள் கல்லூரியின் கற்கை நெறி தொழில் கூடங்கள், வகுப்பறைகள், கட்டங்கள் அனைத்தையும் பார்வையிட்டதுடன், மாணவர்களை சந்தித்து அவர்களுடைய குறைநிறைகளையும் கேட்டறிந்தனர்கள். 

அதிபர், போதனாசிரியர்கள், விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பணிப்பாளர் குழுவினர்களுக்குமிடையே கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது கல்லூரியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள், புதிய கற்கை நெறிகள் ஆரம்பிப்பது குறித்தும் ஆராயப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்கள் இத்தொழில்நுட்பக் கல்லூரி அபிவிருத்தி பற்றிய எங்களது திணைக்களத்திற்கு வந்து எங்களை சந்தித்து பேசினார். நீங்கள் கட்டாயம் எங்களது கல்லூரிக்கு விஜயம் செய்யது அங்குள்ள நிலைமைகளைகண்டறிய வேண்டுமென கேட்டுக்கொண்டத்திற்கு இணங்க நாங்கள் வந்துள்ளோம்

43 வருட காலம் பழமை வாய்ந்த இக்கல்லூரியானது. அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தங்களது தொழில்கல்வியினை இக்கல்லூரியின் மூலமே பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.தற்போது இக்கல்லூரியில் முழுநேரமாகவும், பகுதிநேரமாகவும் தேசிய தொழில் தகமை மட்டம்- 3, மட்டம் – 4 பிரிவுகளில் 35 கற்கைநெறிகள் நடைபெற்று வருவதோடு, சுமார் 1500 மாணவர்கள் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இருந்தும் தேசிய தொழில் தகமை மட்டம்- 5 கற்கைநெறிகளை பயில இப்பிரதேச மாணவர்கள் தூர இடங்களிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கற்று வருகின்றனர். எதிர்வருகின்ற காலங்களில் தேசிய தொழில் தகமை மட்டம்- 5 குரிய கற்கை நெறிகளை ஆரம்பிக்க நடவடிக்கையினை எடுக்க வேண்டுவதோடு, நீண்டகாலத் தேவையாக காணப்படும் தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் நிர்மாணித்தல் போன்றவைகளை பாராளுமன்ற உறுப்பினரும், அதிபர், போதனாசிரியர்களும் பணிப்பாளருக்கு எடுத்துக்கூறினர்கள். இதன்போது தெரிவித்த பணிப்பாளர் அடுத்த வருடம் தேசிய தொழில் தகமை மட்டம்- 5 கற்கை நெறிகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் கேட்டுக் கொண்டத்திற்கு இணங்கதொழில்நுட்பவியல் தேசிய சான்றிதழ் மின்னியல் இயந்திரவியல், பொறிமுறை இயந்திரவியல் – ஓட்டோ மொபைல், கணிய அளவையியல், விவசாய டிப்ளோமா, குளிரூட்டல் வாயுச்சீராக்கல் தொழில்ட்பம், இலத்திரனியல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல், கணனி வலையமைப்பு, ஆங்கிலத்தில் தேசிய டிப்ளோமா, சிங்கள மொழி, கொரியன் மொழித் தேசிய சான்றிதழ் போன்ற கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படும் அதற்கான நடவடிக்கையினை பயிற்சித் திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது. மேலும் தொழில் சந்தைக்கு ஏற்றவாறு குறுகியகாலப் பயிற்சிநெறிகளும் ஆரம்பிக்க நடவடிக்கையினை மேற்கொள்வதோடு, இக்கல்லூரி தொழில் வழிகாட்டி ஆலோசனைப் பிரிவின் ஊடாக இளைஞர், யுவதிகள் மத்தியில் இக்கல்லூரியில் நடைபெற்று வரும் கற்கை நெறிகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி கல்விபயில ஊக்குவிக்க வேண்டும். எனத் பணிப்பாளர் தெரிவித்தார்.

சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் வரலாற்றில் எந்த அரசியல்வாதியும் தானாக வந்து கல்லூரியின் அபிவிருத்தி செய்வது பற்றிய எங்களை அழைத்து கலந்துரையாடினார். அதற்காக அவருக்கு நன்றியினைத் தெரிவிப்பது கல்லூரியின் அபிவிருத்தி உங்களோடு இணைந்து செயற்படவுள்ளோம். எனக் கல்லூரி அதிபர் மற்றும் போதனாசிரியர் தெரிவித்தனர்.இத்தொழில்நுட்பக் கல்லூரியினை 5 எஸ். திட்டத்தினூடாக அபிவிருத்தி செய்ய திட்டங்களை வகுத்துள்ளேன்.. அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment