சம்மாந்துறை வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையா..?? உயிர்ச் சேதார வைத்தியசாலையா..??

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்

இன்று சம்மாந்துறை பொதுமக்கள் மத்தியில் சம்மாந்துறை வைத்தியசாலை பற்றி எழுப்பப்படும் கேள்வி “ சம்மாந்துறை வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையா..?? இல்லை உயிர்ச் சேதார வைத்தியசாலையா..?? ” என்பதுதான். சம்மாந்துறை வைத்தியசாலையின் ஊழியர்கள் பற்றி கடந்த சில வருடங்களாக பொதுமக்கள் வாயிலாக நேரடியாக சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் இன்று சமூக வலைத்தளங்கள் வாயிலாக இளைஞர்கள்-படித்தவர்களால் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

94 வருட கால பழமை வாய்ந்த சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையானது அபிவிருத்தியிலும் வைத்திய சேவையிலும் ஆரம்ப காலகட்டத்தில் பின்னோக்கியே காணப்பட்டது. சிறிய வைத்திய தேவை முதற்கொண்டு பிரசவம் வரையான தேவைகளுக்காக சம்மாந்துறை மக்கள் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கும், கல்முனை வைத்தியசாலைக்கும், அம்பாறை வைத்தியசாலைக்குமே சென்று வந்தனர் ஆனால் தற்போது சம்மாந்துறை வைத்தியசாலையானது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஐ.எம். மன்சூர் அவர்களினால் அவர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இருந்து தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் வரை சம்மாந்துறை வைத்தியசாலையானது அவரது பல்வேறு முயற்ச்சியால் அபிவிருத்தி செய்யப்பட்டு சம்மாந்துறை மக்கள் அனைவரும் பயண்பெறும் விதத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

சம்மாந்துறை வைத்தியசாலையில் தற்போது பல நுாற்றுக்கணக்கான குழந்தைப் பிரசவங்கள் நிகழ்கிறது, குறைந்த அளவிலான தொழில்நுட்பம், உபகரணங்களை வைத்துக் கொண்டு இலங்கையே வியந்து பார்க்கும் அளவுக்கான சத்திரசிகிச்சைகளும் இங்கே மேற் கொள்ளப்பட்டுள்ளது.

எது எவ்வாறாக இருப்பினும் இங்கு காணப்படும் வைத்தியசாலை நிர்வாகம் சம்பந்தமாகவும், வைத்தியசாலை ஊழியர்கள் சம்பந்தமாகவும் சம்மாந்துறைப் பொதுமக்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது இது ஆதார வைத்தியசாலை அல்ல உயிர்ச் சேதார வைத்தியசாலை என்ற ரீதியிலேயே மக்கள் தங்களது விசனத்தை தெரிவிக்கின்றார்கள் இது தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகமோ அல்லது வைத்தியசாலையோடு தொடர்பாக அரசியல்வாதிகளோ உயர் மட்டங்களோ எந்த வித நடவடிக்கைகளும் எடுப்பதாக தெரியவில்லை.

இதோ...முகநுால் வாயிலாக சம்மாந்துறைப் பொதுமக்கள் வைத்தியசாலை தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை அப்படியே இங்கே நான் பிரதி பண்ணி வழங்குகின்றேன்.

01. ஓகஸ்ட் 31ல் எனது சகோதரியை பிரசவ வலியுடன் பிரசவத்துக்காக சம்மாந்துறை வைத்தியசாலையில் காலை 6:00மணிக்கு அனுமதிக்கச்செய்தேன் 11:00 மு.ப அறுவை சிகிச்சைமூலம் ஆரேக்கியமான அழகான பெண் குழந்தை கிடைத்தது அக்குழந்தைக்கு அடுத்தநாள் அங்குள்ள தாதியால் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது தடுப்பூசி ஏற்றப்பட்ட சில நிமிடத்தில் குழந்தை மஞ்ஞல் நிறமாக மாறியுள்ளது எனது சகோதரி தாதியிடம் போய் சொல்லியுள்ளார் அதர்கு தாதி சொல்லியுள்ளார் அந்தகுழந்தை வெள்ளையாக இருப்பதால் மின்குமிழ் வெளிச்சத்துக்கு அப்படி தெரியுதன்று சொல்லி விட்டு கணக்கடுக்காமல் விட்டுட்டாவாம் தாதி .பிறகு அன்றிரவு 8:00pmக்கு குழந்தைக்கு வாயாலும் மூக்காலூம் இரத்தம் வந்துள்ளது அதர்கு எனது சகோதரி அழுதவண்ணம் போய் எனது குழந்தையின் வாயாலும் மூக்காலும் இரத்தம் வருது என்று சொல்லி அழுது இருக்கு அதர்க்கு பிறகு தாதியர் வைத்தியருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார்.அதரக்கு வைத்தியர் அதிவேகமாக அடுத்தநாள் அதிகாலை 1:00 Am க்கு வந்து குழந்தையை மட்டும் தாய் இல்லாமல் அம்பாரைக்கு அந்த மு.....ல் வைத்தியர் அனுப்பியுள்ளார் அம்பாரை வைத்தியசாலையில் இருந்து 15 தடவைக்கு மேல் தொலைபேசியில் ஏன் நீங்கள் குழந்தையுடன் தாயை அனுப்பவிலலையென்று திட்டி தீர்த்தர்க்கு பிறகு தாயை அடுத்த நாள் 12:00pm க்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார்கள் எனது சகேதரி ஆம்புளன்சில் ஏறி உற்காந்த வண்ணம் இருந்திருக்கிறார் தாதி மாருக்குள் நீ போரயா நான் போரயா என்ற ஏதுவாதுப்பட்டு கடசில் 2:00pmக்கு அனுப்பியுள்ளார்கள் அம்பாரையில் உள்ள வைத்தியர்கள் ஏசியுள்ளார் என்ன அங்கு வைத்தியசாலை நடத்துறானுகளா இல்லை மாட்டு தொழுவம் நடத்துறானுகளா என்று தாய் இல்லாமல் குழந்தையை மட்டும் அனுப்பியுள்ளார்கள் அதுவும் உடனே அனுப்பாமல் அர மையத்த அனுப்பியுள்ளார்கள் என்று .எங்கள் சகேதரியின் குழந்தை அடுத்த நாள் மரணத்தைத்தழுவியது இதர்க்கு என்ன சொல்ல வாறிங்க. 

02. பிள்ளை பிறப்பதற்கு தாய்மார் அனுமதிக்கப்படும் விடுதியில் நடக்கும் அட்டூழியங்களை சொல்ல ஒரு நாள் போதாது எனது மனைவியை பிரசவத்துக்கு எடுத்துச் சென்று பட்டபாடு போதும் இனி ஒருபோதும் அந்த பாக்கமா வரமாட்டேன் அங்குள்ள கவனிப்பாளர்கள் உரிய முறையில் பயிற்சியளித்து ஹலாலான முறையில் தொழில் செய்ய எத்தி வையுங்கள்

03.  ஒரு சில ஊழியர்கள் கடமை நேரத்தில் வலிமா.ஹக்கீகா.வேறு விஷேச சாப்பாடுகளுக்கு மற்று அவர்களின் ஏனைய வீட்டு வேலைகழுக்கல்லாம் வெளியில் போறார்கள் இப்படியான ஊழியரகள் வெளிஊர்களுக்கு மாற்ற படவேண்டும்.

04. வைதியசாலை மட்டுமல்ல ஊரில் உள்ளவர்கள் தொழில் புரியும் அனைத்து நிறுவனங்களிலும் 12pmபிறகு போனால் வேலை பார்பதென்பது முடியாத காரியம் அனைவரும் சாப்பாட்டுக்கு சென்றுவிடுவார்கள் பின்னேரம் வேலையை ஓப் பண்ணமட்டும்தான் அவர்களை காண முடியும் ஊரில் உள்ளவர்களை வெளி ஊர்களுக்கு அனுப்பி விட்டு வெளியூர் காறர்களை எமதூர் அலுவலகள்களுக்கு எடுத்தால்தான் இந்த 12மணிக்கி வீட்ட போற கேஸ் நிக்கிம் இதில் பிரதேச செயலகம் கல்விக்கந்தோர் மின்சார காரியாலயம் நீர் வினியோக காரியாலயம் பிரதேச சபை அனைத்துமே அர நேரத்து ஆபிஸ்தான்.

05. அடுத்ததாக சம்மாந்தறை வைத்தியசாலை நுழைவாயில் உள்ளே உள்ள குடிநீர் வசதி க்குகு ஏற்படுத்திய hot and coolar water மிகவும் அழுக்காக காணப்படுகிறது.

06. அங்கே உள்ள dental ladies doctor கடுமையான முறையில் கோபம் கொள்கிறார்.

07. எல்லாமே பிரச்சினைதான் உங்களுக்கு தெரியாத விடையம் அல்ல நீங்கள் முகமூடி அணிந்து உங்களுடைய மனைவி அல்லது சகோதரியின் பிரசவ காலத்தில் அழைத்துச் சென்றால் தெரியும் அங்குள்ள அவலம் நாசம் ஆகித்தான் வீட்ட அனுப்புவாங்க போங்க சார் போய் உங்க வேலையை பாருங்க

08. Intha hospital a doctor's or nurse relations ku thaan first priority public a aduthathaathaan paarpaanga diabetics clinic la parkalaam intha kodumaya

09. Mariyath thara theriyathawanga nirayawe irukanga

10. Please try to teach them how they have to behave with patients

11. Reception ல இருக்கிறவங்க மக்களிடம் அன்பாக பேச சொல்லுங்க பெரிய doctor என்ற நினைப்பு...

12. நமது வைத்தியசாலையில் இல்லாத பிரச்சினையா

13. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா ?

14. நீங்கள் எவ்வளவுதான் ஆஸ்பத்திரியை புணர் அமைத்தாலும் மக்கள் உங்களுக்கு ஆதரவு அளிக்கமாட்டார்கள் காரணம் உங்களுக்கு சாதவா மக்களுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்று தெரியாது இப்பவே இப்படி இருக்கிங்க அபிவிருத்தி நடந்துமுடிந்தபின் அடிப்பிங்க மக்களுக்கு
முதல்ல management ட மாத்துங்கப்பா]]]

15. இன்னும் நம்மவன் திருந்தல்ல இன்றைக்கு யாரோ ஒருவன் #சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அடிக்கல் நாட்ட வாரயாம் என்று சொல்லி அங்கு வார நோயாளிகள ஓடுங்க ஓடுங்க இன்றைக்கு பாக்க முடியாது என்று வெளியேற சொல்றாங்க நம்முடைய #சம்மாந்துறை மாடுகளுக்கு அறிவில்லதானே பாவம் அப்பாவிகள் திரும்பி போகும்போது மனவறுத்தமாக உள்ளது அங்குள்ள தாதிமார்களை ஐயே சொல்லவா வேண்டும் 26/09/2017

16. தாதிமார்கள் அல்ல நாய் மார்கள்

17. சம்மாந்துறையில் வைத்தியசாலையில் இருக்கும் ஒரு சில குரங்குகள்தான் கடைசி காலத்தில் இந்த அப்பாவி மக்ககளுக்கு செய்த பாவத்திற்கு அல்லாஹ் விடத்தில் தன்டனை அனுபவித்தே ஆகவேண்டும்

18. வைத்தியர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.
நபி ஈஸா ( அலை ) அவர்களும் வைத்தியராகத்தான் வாழ்ந்தார்கள். 
தஜ்ஜாலும் இவ்வுலகத்தில் வைத்தியராகத்தான் வருவான். 
உங்கள் கப்ருகளை நீங்களே நிர்மானித்துக்கொள்ளுங்கள்.
University ல கிடைக்கிற அத்தனை புலமைப்பரிசில்களையும் அனுபவித்து மாமனாரின் சீதனம் வயல் வீடு கார் உற்பட அனைத்தையும் உறுஞ்சிவிட்டு அரசாங்கம் தரும் கார் போமிட் லச்சக்கணக்கில் சம்பளம் இவ்வளவும் போக குளிசை கம்பனிகளிடமும் பிச்சை வாங்கிவிட்டு. தனியே இரவு நேரங்களில் டிஸ்பன்சரி மூலம் ஏழை நோயாளிகளிடம் பணம் பறிக்கும் உங்கள் ஈமானுக்கும் மாற்று மத மக்களுக்குமிடயில் என்ன வித்தியாசம்.

19. வைத்தியர்கள் என்று ஒட்டுமொத்தமாக சொல்ல வோண்டாம் ...ஒரு சில நாகரீகமற்ற , பண்பாடுல்லாத , புதுசா பணத்தை கண்ட சிலரால்தான் நல்ல வைத்தியர்களுக்கும் கெட்ட பேர்.. சென்ற வருடம் எனது தாய் மருந்து எடுக்க போயுள்ளார் நமதூரின் வைத்தியர் ஒருவரிடம் தனக்குள்ள பிரச்சினைகளை செல்லியிருக்கா!!! அதற்கு அவர் உடனே சென்னாராம் உங்கல குமராக மாற்ற நான் மருந்து தரவா?? என்று கோட்டு கிண்டலாடித்துள்ளார்... அழுது கொண்டு வீடு வந்துள்ளார் எங்கம்மா.. இதை அவர் தாயிடம் கோட்டுப்பார்த்திருக்கலாம்.. அவர் நடத்தும் சொந்தகிளினிக்கு சென்றிருந்தால் காசுக்காக இனிப்பாக கதைத்திருப்பார்..

20. எமது ஊர் வைத்திய சாலையில் ஒரு சில வைத்தியர்களின் நாகரீகம் அற்ற கீழ்த்தரமான செயல்களில்தான். இவற்றில் குறிப்பாக தாதிமார்களும் உட்பட

21. There is on doctor who is very cruel to the patient ,I pray to Allah SWT not to see her again in my life..

22. ஒரு நோயை குணப்படுத்துவதில் மாத்திரைகளுக்கு இருக்கும் அதே சக்தி
அன்பான வார்த்தைகளுக்கும் இருக்கின்றது.

23. ETU க்குள்ள எனது தந்தையை Admitted பண்ணிட்டன் பெரிய சிகிச்சை எதுவும் செய்யவில்லை அந்த நேரம் எனது தந்தை என்னை கூப்பிடுகிறார் But doctor என்னை வெளில போகும்படி சொல்கிரான் Persons உடன் வந்த என்னை வெளிய போக சொல்றான் Doctor அவர்ர சின்ன மகன Etu உள்ளுக்கு வச்சிட்டு சும்மா அரட்டை கதை பேசிட்டு இருக்கான்
அந்த மௌத்து Doctor a யும் வந்தே தீரும் கேவலமான மரணமாக கூட இருக்கலாம்

24. மக்கள் மயமாக்காவிட்டால் பரவாயில்லை,
பொடுபோக்கற்ற சிறந்த சேவையினை வழங்க சொல்லுங்க ஊழியர்களை.
தெரியவில்லை என்றால் அம்பாரைக்கு போய் பார்க்க சொல்லுங்க

25. சம்மாந்துறை வைத்தியசாலை தங்கி நோய் நீங்கிப்போனவர்களிடம் கேட்டுப்பார் உண்மை தெரியும் அங்குள்ள ஊழியர்கள் தன்மை நோய்கள் நீங்கி போறவர்களைவிட இவ்விடத்தை விட்டு போனா போதும் என்றவர்கள்தான் அதிகம் இன்னும் இரவு நேரம்களில்10 மணி யான தாதிமார்கள் தூங்கிறதும் நோயாளிகள் கதவுதட்டி எழுப்புறதும் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது

26. அங்கு உள்ள சிற்றுளியர்கள் அனைவரையும் வேறு ஊருக்கு மாற்ற வேண்டும்

27. தம்பி நீங்கள் அங்கு வந்து அனுபவப்பட்டால் தெரியும் . . அப்படித்தான் ஒரு கிழமைக்கு முன் காய்ச்சல் என்று வந்த பெண்னை சக்கர நார்காலியில் இருபபாட்டி விழுந்து தலை வெடித்து பெரிய பிரச்சனை அப் பெண்னை அம்பாரை GHக்கு அனுப்பியது உங்களுக்கு தெரியாது ஏனெனில் நீங்கள் கொழம்பில் வாப்பா்

28. masha Allah அருமை.

எல்லாம் தேவைதான் ஆனால் மிக மிக முக்கியமான தேவையாக எமது Hospital க்கு பெண் மகப் பேற்று நிபுணர்கள் மிக மிகக் கட்டாயத் தேவையாகவுள்ளது முடிந்தால் இந்த விடயம் சார்பாகவும் சிந்தியுங்கள் இது எம் உடன் பிறந்த ,பிறவா அருமைச் சகோதரிகளுக்குச் செய்யும் அடிப்படையான ஸதகா என்றால் மிகையாகாது .

29. சம்மாந்துறை வைத்தியசாலையில் பிரசவவிடுதியில் போதியளவு இடப்பற்றாக்குறை நிலவுகிறது, அங்கே ஒரு கட்டிலில் மாறி மாறி இரண்டு மூன்று கர்ப்பிணிகள் தங்குகிறார்கள்.

30. சம்மாந்துறை வைத்தியசாலை ஏன் இன்னும் மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்படவில்லை உடனடியாக சம்மாந்துறை வைத்தியசாலையை தரமுயர்த்தி மத்திய அரசின் கீழ்க் கொண்டு வந்தால் சம்மாந்துறை வைத்தியசாலையானது அபிவிருத்தியில் மேலும் சிறந்து விளங்கும்.

மேற் கூறிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முகநுால் வாயிலாக பொதுமக்களால் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு எதிராக காரசாரமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களாகும். நீங்கள் சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் நின்று அங்கு வரும் போகும் அத்தனை பொதுமக்களிடம் சம்மாந்துறை வைத்தியசாலையின் செயற்பாடுகள், ஊழியர்களின் நடத்தை போன்றவற்றைப் பற்றி வினவினால் அவர்கள் காரித் துப்பாத குறையாகவே பதில் சொல்வார்கள் அந்த அளவுக்குத்தான் சம்மாந்துறை வைத்தியசாலையின் போக்கு காணப்படுகின்றது.

வைத்தியசாலை நிர்வாகம் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு என்ன காரணம் கூறப் போகின்றது...??? வைத்தியசாலை ஊழியர்களை நெறிப்படுத்த திராணியற்றா நிர்வாகமா அங்கே இருக்கிறது...???

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்களே...!! நீங்கள் சம்மாந்துறை வைத்தியசாலையை பல்வேறு விதத்தில் அபிவிருத்தியடைய வைத்து சம்மாந்துறை மக்களை திருப்திப்படுத்தினீர்கள் ஆனால் வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் விடயத்தில் சம்மாந்துறை மக்கள் இன்னும் திருப்தியடையவில்லை.  இது தொடர்பாக உங்களது காத்திரமான நடவடிக்கையினை மேற்கொள்ளுங்கள்.

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment