வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு புதிதாக சமூர்த்தி முத்திரைகள் வழங்கும் நிகழ்வு.

இப்றாஹீம் தக்கீத்.

சம்மாந்துறைப் பிரதேச செயலத்தில் நீக்கம் செய்யப்பட்ட 9 முத்திரைகளை வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட 9 குடும்ங்களுக்கு வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கையளிக்கும் நிகழ்வு இன்று தலைமை காரியாலைய முகாமையாளர் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதேச செயலாளர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.

ஏழு வருடங்களுக்குப் பின்னர் புதிதாக முத்திரை வழங்கக் கூடிய சுற்று நிருபம் தற்போதுதான் நடைமுறைக்கு வந்துள்ளமையானது மிகவும் கஷ்டமான நிலையில் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.

இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர்,திட்ட முகாமையாளர்,வங்கி/வலய முகாமையாளர்கள் ,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.












Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment