சம்மாந்துறை பிரதேச சபையின் நூலகங்கள் ஒன்றிணைந்து விழிப்புணர்வு ஊர்வலம்.

(எம்.எம்.ஜபீர்)

தேசிய வாசிப்பு மாதம் தொடர்பாக பொது மக்களை விழிப்புணர்வூட்டும் வகையில் சம்மாந்துறை பிரதேச சபையின் நூலகங்கள் ஒன்றிணைந்து அமீர் அலி பொது நூலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

வாசிப்பின் சிறப்பை வலியுறுத்திய சுலோகங்களை ஏந்திவாறும், பொது மக்களுக்கு நூலகத்தின் சிறப்பை வலியுறுத்தியவாறும் அம்பாரை பிரதான வீதியூடாக சென்று ஹிஜ்ரா சந்தியூடாக சம்மாந்துறை பிரதேச சபையினை வந்தடைந்தது.

அமீர் அலி பொது நூலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில்  பாடசாலை மாணவர்கள், பிரதேசத்திலுள்ள நூலகங்களின்  ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பொது மக்களை அறிவுறுத்தும் வகையில் துண்டுப்பிரசுங்களும் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களால் வினியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உளுளுராட்சி உதவியாளர் எஸ்.கருணாகரன், சம்மாந்துறை பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.வாஹிட், அமீர் அலி பொது நூலகத்தின் நூலகர்களான ஐ.எல்.எம்.ஹனீபா, எம்.எம்.முனவ்வர், வீ.சீ நூலகத்தின் நூலகர் ஏ.வீ.எம்.சர்ஜூன், தொழில் நூட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் நூலகங்களின் ஊழியர்கள், வாசகர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment