சம்மாந்துறை தேசிய பாடசாலையை மேம்படுத்தல் தொடர்பான விஷேட கலந்துரையாடல்.

சம்மாந்துறை நலன்புரி மற்றும் அபிவிருத்திப் பேரவை சம்மாந்துறை தேசிய பாடசாலை நிர்வாகத்தினருடன் விஷேட சந்திப்பொண்றை எற்பாடு செய்திருந்தனர்.
கடந்த 2017-10-20 வெள்ளிக்கிழமை பி.ப. 6.30 மணியளவில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடல் நிகழ்வில் பாடசாலையின் முதல்வர் அல்ஹாஜ் இஸ்மாயில் அவர்களும், பாடசாலை ஆசிரியர்களும், கோட்டக்கல்வி அதிகாரி அல்ஹாஜ் சபூர்தம்பி மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் SWDC சார்பில் அதன் தலைவர் அல்ஹாஜ் ஏ.எல் ஜௌபர் சாதிக் நிர்வாக இணைச் செயலாளர் அல் ஹாஜ் எம்.எஸ்.எம். அன்சார் நலன்புரி இணைச் செயலாளர் பர்வீஸ் மஹ்றூப் மற்றும் கல்வி அபிவிருத்தி பிரிவிற்கான பொறுப்பாளர் அவர்களும் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஆரம்ப அங்கமாக சம்மாந்துறை அபிவிருத்திப் பேரவையினால் (SWDC) பாடசாலையின் முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பாக, பாடசாலையை பெற்றோருடன் இணைப்பது, சமூக ஒத்துழைப்புடன் பாடசாலை அபிவிருத்தியை மெற்கொள்ளவது, பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினை மீளமைப்பது, பாடசாலை பாடவிதானங்களில் முன்னேற்றங்களை கொண்டுவருவது போன்றன தொடர்பில் திட்ட ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பாடசாலை முதல்வரினால் பாடசாலையின் தற்போதைய நிலை மற்றும் பாடசாலை எதிர்கொள்கின்ற உள்ளக வெளியக சவால்கள், உட்கட்டமைப்பு பௌதீக வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் விளக்கமளித்ததோடு, பாடசாலையின் அண்மைக்கால முன்னேற்றம் தொடர்பான தரவுகளையும் வளங்கினார். பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் மீளமைப்பு கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பதினெட்டாம் (18) திகதி நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர் திட்டங்கள் பாடசாலை நிர்வாகத்தினரின் பரிசீலனைக்கு கொடுக்கப்பட்டதுடன். பாடசாலை முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
மேலும் எதிர்வரும் காலங்களில் பாடசாலை நலன் தொடர்பிலான திட்டங்களுக்கு அதிபர் தனது பூரண ஒத்துழைப்பை நல்குவதாக தெரிவித்தார். மேற்படி கலந்துரையாடல் நிகழ்வு வெற்றிகரமாக இரவு 8.00 மணியளவில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

Thanks - http://www.swdc.lk/
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment