கடமைகளைப் பொறுப்பேற்றார் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி M. K. இப்னு அசார் அவர்கள்.

தகவல் - மருதூர் ஹசன்.

சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள M. K. இப்னு அசார் அவர்கள் இன்று (30.10 .2017) தனது கடமைகளைப் பொறுப்புக் கொண்டார். கடமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் இந் நிகழ்வில் சமய தலைவர்கள், பல்துறை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள். 

இங்கு உரை நிகழ்த்திய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி M. K. இப்னு அசார் அவர்கள்,

எனது பதவியின் ஊடாக முடியுமானவரை நீதியை நிலை நாட்ட பாடுபடுவேன் என்றும்   அதற்காக நான் 24 மணி நேரமும் கடமை செய்ய தயங்க மாட்டேன். பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை தயங்காமல் என்னிடம் வந்து முன்வைக்கலாம். எனது பணியினை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல பொதுமக்களாகிய உங்களது பங்களிப்பும் எனக்கு அவசியம் என உரையாற்றினார்.

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment