சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் சித்திரப் போட்டி.

(எம்.எம்.ஜபீர்)

சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் தேசிய வாசிப்பு மாதத்தினை விளிப்பூட்டுவோம் எனும் தொனிப்பொருளில் சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தின் ஏற்பாட்டில்;  நடைபெற்ற சித்திரப் போட்டி சம்மாந்துறை பிரதேச சபை செயலாரும் விசேட ஆணையாளருமான ஏ.ஏ.சலீம் தலைமையில்  நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 



சம்மாந்துறை பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.வாஹிட், அமீர் அலி பொது நூலகத்தின் நூலகர்களான ஐ.எல்.எம்.ஹனீபா, எம்.எம்.முனவர், வீ.சீ நூலகத்தின் நூலகர் ஏ.வீ.எம்.சர்ஜூன், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



இதன்போது  அமீர் அலி பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாதத்தினை  முன்னிட்டு 100 பாடசாலை மாணவர்களுக்கு இலவச அங்கத்துவம் வழங்கிவைக்கப்பட்டது.




Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment