சம்மாந்துறை 40 வீட்டுத்திட்ட பிரதேச வீதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க புணரமைப்பு.

சம்மாந்துறை சென்னல் கிராமம் ஹிஜ்ரா வித்தியாலயத்திற்கு முன்னால் இருந்து 40 வீட்டுத்திட்டத்தினை ஊடாடறுத்து செல்லும் தைக்குவா பள்ளிவாசலை சென்றடையும் வீதியை புணரமைக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.

இவ் வீதித் திருத்தம் தொடர்பாக கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் ஆகியோர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க 60 இலட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீட்டில் இவ் வேலைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இவ்வீதியின் அபிவிருத்தி வேலைகளை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏ.ஏ.சலீம், சம்மாந்துறை பிரதேச சபை தொழில் நுட்ப உத்தியோகத்தர் ரீ.உதயன், பிரதேச முக்கியஸ்தருடன் நேரில் சென்று பார்வையிட்டனர்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment