சம்மாந்துறைப் பிரதேச சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களாக மூன்று பேர் ஜனாதிபதியினால் நியமனம்.


அன்சார் காசீம்.

சிரிலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைத் தொகுதியிலுள்ள சம்மாந்துறைப் பிரதேச கட்சி அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலின் சகோதரரான ஏ.எல்.எம்.றஸீன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடிதம் வழங்கும் வைபவம் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சிரிலங்கா சுதந்திரக் கட்சியின் 3 சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர்கள்.

மேலும் தொழிலதிபர் வை.எம்.முஸம்மில் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.வை.எம்.முகம்மட் (நைப்) ஆகியோர்களும் ஜனாதிபதியினால் சம்மாந்துறைப் பிரதேச சுதந்திரக் கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment