மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பான தேசிய ஷுரா சபையின் ஊடக அறிக்கை.

ஊடக அறிக்கை

மாகாண சபை எல்லை நிர்ணயப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சிவில் சமூகம், அரசில் கட்சிகள் மற்றும் தனி நபர்களிடமிருந்தான முன்மொழிவுகளும் கோரப்பட்டுள்ளதுடன் குறித்த முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி நவம்பர் மாதம் 02 ஆம் திகதி எனவும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான தேசிய மட்ட ஆய்வுப் பணிகளை ஆரம்பித்து, தேவையான இடங்களுக்கும் சென்று களப் பணிகளை மேற்கொண்டு தேசிய மட்டத்திலும் பிராந்திய அமைப்புக்கள் ஊடாகவும்

எந்தவொரு அரசியல் கட்சினதோ அல்லது அரசியல் கட்சிகளின் ஆதரவுடனான குழுக்களினதோ அழுத்தங்கள் மற்றும் இடைவினைகள் இல்லாத வகையில் சுயாதீனமாக முறையிலும் ஆக்கபூர்வமாகவும் உரிய பரிந்துரைகளை முன்வைப்பதற்கு தேசிய ஷுரா சபையின் 2017.10.16 ஆம் திகதி நடைபெற்ற நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்ட்டுள்ளது.  

இந்தப் பணியில் தேசிய ஷுரா சபையின் அங்கத்துவ அமைப்பும் தேசிய எல்லை நிர்ணயப் பணிகளில் 1960 களிலிருந்து முன்நின்று பணியாற்றி வரும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனமும் (ACUMLYF) ஒன்றாக இணைந்து பணியாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதுடன் தேசிய ஷுரா சபை அங்கத்தவர் மற்றும் ACUMLYF பொதுச் செயலாளர் முஹம்மது அஜிவதீன் அவர்கள் இந்த முன்னெடுப்பின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றுவார். 

இந்த தேசிய முன்னெடுப்பானது,

01. இலங்கையின் 14,021 கிராம சேவகர் பிரிவிகளிலும் முஸ்லிம்கள் 20% த்திலும் அதிகமாக வாழும் சுமார் 1,500 கிராம சேவகர் பிரிவுகளில், குறிப்பாக 500 போ்க்கும் அதிகமாக வாழும் 1,138 கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள மக்கள் இந்த எல்லை நிர்ணயப் பணி தொடர்பாக நியாயமானமுறையிலும் தெளிவாகவும் அறிவூட்டப்படல்,

02. முஸ்லிம்கள் செறிவாக வாழும் சுமார் 25 மையங்கள் மீதும் கூடிய கவனம் செலுத்தி அப்பிரதேசங்களிலிருந்தான முஸ்லிம் பிரதிநித்துவத்தை உறுதிசெய்யும் வகையில் ஆக்கபூர்வமான எல்லை நிர்ணய முன்மொழிவுகளை முன்னைத்தல்.

03. செல்வாக்குமிக்க சுமார் 50 முஸ்லிம் குடியிருப்பு மையங்களில், அங்கு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வாய்ப்புக்கள் குறைவாக இருப்பினும், முஸ்லிம்களின் வாக்குகள் துண்டாடப்படாது பாதுகாக்கபடுவதுடன் அவர்கள் அங்கு பிரதான தீர்மானிக்கும் சக்தியாக செயற்படுவதற்கான சூழலை உருவாக்கும் வகையில்  பிராந்திய அமைப்புக்களை வலுப்படுத்தல்.

04. தற்போது முன்னெடுக்கப்படும் அரசியரமைப்புப் சீர்திருத்த நடவடடிக்கைகள் மற்றும் பாராளுமன்றத் தோ்தல் முறை மாற்ற நடவடிக்கைகளுக்குப் பங்களிப்புச் செய்யும் வகையிலானதொரு அடிப்படை ஆய்வுப் பணியாக இந்த முன்னெடுப்பை மாற்றியமைத்தல்.

எனும் பரந்த நோக்கங்களைக் கொண்டுள்ளது. எனவே இந்த தேசிய முன்னெடுப்பில் பற்கேற்று பணியாற்ற விரும்பும் சிவில் சமூக உறுப்பினர்களையும், துறைசார் புலமைபெற்றவாகளையும், பிராந்திய சிவில் அமைப்புக்களையும் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம். இந்தப் பணியில் இணைய விரும்புபவர்கள் தமது பெயர் மற்றும் தொடர்பு இலக்கங்களை 07766270470 (NSC), 0779544477 (ACUMLYF), 0714422146 (ஒருங்கிணைப்பாளர்) ஆகிய இலக்கங்களுடன் SMS மூலம் பதிவு செய்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment