அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் காசிமுக்கு அட்டாளைச்சேனையில் பாராட்டு.

(எம்.ஜே.எம்.சஜீத்)

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி மூதூர் கல்வி வலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் அஷ்ஷேஹ் ஏ.எல்.எம்.காசிமின் சேவையினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  (30) அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை கோட்ட அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ.சீ.கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அத்துடன் முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் என்.ஜமால்தின், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபர் ஏ.எல்.கமறுதீன் மற்றும் நிருவாக உதவியாளர் ஹாரிஸ், உட்பட அட்டாளைச்சேனை கோட்ட அதிபர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது வலயக்கல்விப் பணிப்பாளர் காசிமின் சேவையினை பாராட்டி அட்டாளைச்சேனை கோட்ட அதிபர் சங்கத்தினால் பொண்ணாடை போர்த்தி பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment