பிரதியமைச்சர் அமீர் அலி வெட்கப்பட வேண்டியதருணமிது.

முன்னாள் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்  தொடர்பில்  தான் தெரிவித்த   கருத்துக்கள் தொடர்பில் சுயமதிப்பீடு  பிரதியமைச்சர் அமீர் அலி  வெட்கப்பட வேண்டிய தருணமிது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம் லாஹிர் தெரிவித்தார்

மத்திய அரசாங்கத்தில் ஒரு பிரதியமைச்சராக அமைச்சொன்றை வைத்திருக்கும் அமீர் அலி  கிழக்கு மாகாணகல்வியியல் கல்லூரிகளில் கற்று  வெளி மாகாணங்களுக்கு நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களை சொந்தமாகாணத்திற்கு பெற்றுக் கொடுக்க முடியாமல் முன்னாள் கிழக்கு முதல்வரின் செயற்றிறன் குறித்து பேசுவதுவேடிக்கையாகவுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் லாஹிர் குறிப்பிட்டார்,

கிழக்கின் கல்வியியல் கல்லூரிகளில் பயின்று வெளிமாகாணங்களுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்களின்பிரச்சினை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் லாஹிர்

கடந்த 2015 மற்றும் 2016 ஆகிய வருடங்களில் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு நியமனம்பெற்ற ஆசிரியர்களை சொந்த மாகாணத்திற்கு கொண்டு வருவதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கடுமையாகபோராடி வெற்றிபெற்றார்,

தற்போது குறித்த ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கல்வி கற்பிக்கின்றனர்,

எமது மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகையில் எமது ஆசிரியர்களை வெளிமாகாணங்களுக்குநியமிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது ,

இந்த நியமனங்களை மத்திய அரசாங்கமே வழங்கியுள்ளது,அவ்வாறாயின் மத்தியரசாங்கத்தினால் ஆசிரியர்களுக்குஇழைக்கப்பட்டுள்ள அநீதியை மத்தியரசில் அமைச்சராய் உள்ளவர்களாலேயே தீர்க்க முடியாவிட்டால் அவர்களைபாராளுமன்றத்துக்கு அனுப்பிய மக்கள் இனி சிந்திக்க  வேண்டியுள்ளது,

மத்தியரசில் அங்கம் வகித்தும்  ஒரு சமூகப் பிரச்சினையை  உரிய தலைமைகளுடன் பேசித்  தீர்க்கும்ஆளுமை   உங்களிடம்  இல்லையென்பதை  மக்கள் தற்போது  நன்கு புரிந்து  கொண்டுள்ளனர்


இந்த  கிழக்கு முதலமைச்சர் கிழக்கு மாகாணத்துக்கு இனி முதலமைச்சராய் வரக் கூடாது என அமீர் அலிதெரிவித்தாரென்றால்  இதுவரை  காலமும்  அரசியலில்  இருந்த  உங்களால்  செய்ய முடியாத கல்வியியல்கல்லூரி ஆசிரியர்களை  சொந்த மாகாணத்தில் நியமிக்கும் சாதனையை  அவரே  நிலை நாட்டினார்.

மாகாணத்தில்  ஆசிரியர் பற்றாக்குறை இருக்கையில் சொந்த மாகாணத்தில் நியமனம்  பெற்ற ஆசிரியர்கள் கண்கலங்கி  இருக்கையில்  பாராமுகமாக இருக்கும் உங்களைப் போன்ற அரசியல்வாதிகளின் தரத்தையும்முன்னாள்  கிழக்கு முதலமைச்சரின் பெறுமதியையும்  மாாகணம் தற்போது உணர்ந்திருக்கின்றது,

ஆகவே  மாகாண ஆசிரியர்களின் பிரச்சினைகளை  தீர்க்கும்  திறனற்ற  நீங்கள் அது ஒரு சுலபமான  காரியம் என  செய்து காட்டிய முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீரிடம் ஆளுமையை  கற்றுக்கொள்ளுங்கள்,

மக்கள்  பணி  செய்யும்  அரசியல்வாதிகளை  தூற்றி  தமது  இயலாமையை  மறைக்க முடியும் எனஎண்ணிணால் அதனை நம்பி ஏமாறுவதற்கு  மக்கள் இனியும் தயாரில்லை என்பதை நினைவிலிருத்திக்கொள்ளுங்கள்,

உண்மையைாக நீங்கள் ஆளுமையுள்ள ஆற்றலுள்ள அரசியல்வாதியாக இருந்தால் வௌிமாகாணங்களுக்குநியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களை  சொந்த  மாகாணத்தில் நியமித்துக் காட்டுங்கள்  என சவால் விடுப்பதாககிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம் லாஹிர் குறிப்பிட்டார்
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment