மகிந்தவுக்கு வாலையும் மைத்திரிக்கு தலையையும் காட்டி அரசியல் பிழைப்பு நடத்தும் அதாவுல்லாஹ்.

மகிந்த ராஜபக்ஷ தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்த்து எப்படியாவது ஆட்சிக்கு வருவார் என்ற நப்பாசையில் அதாவுல்லாஹ் சேர் தமது அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறார்.

இத்தனை வருட காலம் பதவியிலிருந்த போது தனது சொந்த ஊரான அக்கரைப்பற்று மண்ணைத்தவிர அம்பாரை மாவட்டத்தின் வேறு எந்தப் பிரதேசத்திற்கும் எந்த உதவியும் செய்யாத முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் தற்போது ஏராவூருக்கும் முல்லைத்தீவுக்கும், புல்மோட்டைக்கும், முசலிக்கும் ஓடித்திரிவது அவரின் அரசியல் மடமைத்தனத்தையே வெளிப்படுத்துகின்றது.

முஸ்லிம் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் அதாவுல்லாஹ் பதவியிலிருந்த போது இந்த மக்களுக்கு பிரச்சினைகள் வரும் போது எட்டியும் பார்க்காதவர்.

எத்தனையோ பலமான அமைச்சுப்பதவிகளை அவர் கொண்டிருந்த போதும் வடக்கு அகதிகள் பற்றியோ, தர்கா நகரில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியோ அல்லது வேறு அனர்த்தங்களினால் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்ட போது ஏறெடுத்தும் பார்க்காதவர் விடியலை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்திருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

குதிரை நன்றாக ஓடிய போது மக்களைக் கருத்திற்கெடுக்காதவர் நொண்டியானபோது எவ்வாறு உதவப்போகின்றார்?

அதாவுல்லாஹ் சேரின் இன்னுமொரு தந்திரோபாயத்தையும் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

கிழக்கிலே முஸ்லிம் கூட்டமைப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு தானும் ஆதரவு போன்று காட்டி மக்களைப் பேய்க்காட்டி வரும் இந்த அதாவுல்லாஹ் சேர் ஒரு போதும் கூட்டமைப்பில் இணையப்போவதில்லை என்பதை ஏற்பாட்டாளர்களுக்கு மிகவும் தெளிவாக முன்வைக்க விரும்புகின்றோம்.

கூட்டமைப்பில் தானும் இணையப் போவதாக மக்களை ஏமாற்றி தனது கூட்டங்களில் ஆட்சேர்ப்பதே அதாவுல்லாஹ்வின் யுக்தி என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன்.

இன்று கிழக்கு உலமாக்கள், கல்வியாளர்கள், வர்த்தகர்கள், வீரமுள்ள தன்மான இளைஞ்சர்கள் எமது சத்திய தேசிய தலைவர் றிஷாட் அமைச்சரையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியையும் நம்பிகை கொண்டு இனைந்து கொள்ளும் இச் சந்தர்ப்பத்தில் அதாவுல்லாஹ் சேரின் இரட்டை முகமும், குழிப்பறிப்பும், கார்ப்புணர்ச்சி கொண்டு உலறிக் கொண்டிருக்கின்றார்.எமது அம்பாரை மாவட்ட இரண்டு வருட வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் அதாவுல்லாஹ் சேர் தள்ளாடுகின்றார்,

யா அல்லாஹ் அதவுல்லாஹ் சேருக்கு சமூக அரசியல் உணர்வைக் கொடுப்பாயாக,.

அவரை கார்புணர்ச்சி அரசியலில் இருந்து பாதுகாப்பாயாக.


ஜுனைடீன் மான்குட்டி,
கல்முனை.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment