அக்கறைப்பற்றுச் சகோதரர்களிடம் ஒரு வினயமான உதவி வேண்டும்.


Rifaj Aslam

நேற்று (30-09-2017 )கண்டியிலிருந்து அம்பாறை நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்ஸில் வைத்து எனது ஸ்மார்ட் போன் ( Samsung A5 2017 Model ) காணாமல் போய்விட்டது,

வீட்டுக்கு திரும்பி வந்த போது பஸ்ஸில் நடைபெற்ற ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது, எனக்கு முன் இருக்கையில் இருந்த சகோதரர் என்னிடம் பல தடவை ஒரே கேள்வியை கேட்டார் " உங்கள் பெறுமதியான எதாவது ஒரு பொருள் தொலைந்து விட்டதா என்று " நானும் இல்லை இல்லை என்றே பதில் அளித்தேன் அப்போது நான் என்னுடைய மொபைல் போன் என்னுடைய bag இல் இருப்பதாகவே நினைத்து கொண்டேன்.

நான் அம்பாறையில் பஸ்ஸை விட்டு இறங்கிய போது மீண்டும் அவர் என்னிடம் வந்து உங்களுடைய ஊர் எது என்று கேட்டார், நான் சம்மாந்துறை என்றேன் , சம்மாந்துறையில் எங்க என்றார், Al Muneer School பின்னுக்கு மீண்டும் என்னுடைய பெயரை கேட்டார், பெயரை சொன்னவுடன் மிக நட்பாக நான் உங்களை வந்து சந்திக்கிறேன் என்றார், எனக்கு இது மிக ஆச்சரியமாக இருந்தது, ஏன் என்னை தெரியாத சகோதரர், ஊர் பெயர் எல்லாம் கேட்டுவிட்டு மீண்டும் சந்திப்பதாக கூறுகின்றார் என்று நினைத்துக்கொண்டு அவரிடம் நான் உங்களுடைய ஊர் எது என்று பதிலுக்கு கேட்டவுடன், தான் அக்கறைபற்று என்று கூறினார்.

ஒரு நேரம் அவர் என்னுடைய மொபைலை கண்டெடுத்து அதனை தேடி அழைப்பை எடுப்பவரிடம் ஒப்படைக்கலாம் என நினைத்து இருக்கலாம், ஆனால் என்னுடைய மொபைலில் இலங்கை sim எதுவும் போட்டு பேச முடியாது அதனால் அந்த phone ஐ மீண்டும் என்னால் தொடர்பு கொள்ள முடியாது அவராலும் அதனை country code lock உடைக்காமல் use பண்ண முடியாது. மற்றும் அது finger print மூலம் கடவுச்சொல் கொடுக்கப்பட்டது
அக்கரைப்பற்று நண்பர்கள் இதனை ஓர் உதவிக்கிக்காக பகிர்வதன் மூலம் இந்த செய்தி அந்த சகோதரரை சென்றடையலாம்.

தொடர்புகளுக்கு ..
Aslam – 0765436840
Jawahir - 0772327547
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment