12ஆம் கொளனி மெகா ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டுப் போட்டி நிகழ்வு.

எம்.எம்.ஜபீர்.

மத்தியமுகாம் சாளம்பைக்கேணி-04 மெகா ஸ்டார் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த விளையாட்டுப் போட்டி மற்றும் கௌரவிப்பு நிகழ்வு விளையாட்டு கழகத்தின் தலைவர் ஏ.ஆர்.எம்.அம்ஜாத் தலைமையில் இன்று சனிக்கிழமை மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர்,பிரதம அதிதியகலந்துகொண்டு சிறப்பித்தார். 

அதிதிகளாக முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் ஏ.கே.அப்துல் சமட், நாவிதன்வெளி பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் ஏ.சீ.நிஸார், அமீர் அலி விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எம்.வீ.நபாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச மத்திய குழுக்களின் ஆலோசகர் மீரார் ஹாஜியார்,பிரதி அதிபரும் ஊடகவியளருமான முஸ்தபா பள்ளிவாசல் பிரதிநிகள், கிராம அபிவிருத்தி சங்கம், மகளிர் அமைப்பு, விளையாட்டு கழகம், பாலர் பாடசாலை ஆகியவற்றின் பிரதிநிகள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.


இதன்போது இக்கிராமத்தில் முதல்முறையாக இவ்வருடம் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடத்திற்கு தெரிவான மாணவன் எச்.றிபாத் அஹம்மட் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையில் 164 புள்ளியை பெற்று சித்தியடைந்த மாணவி எப்.பாத்திமா சனா ஆகியோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment