மத்தியமுகாம் சாளம்பைக்கேணி சங்களுக்கு உபகரணம் கையளிப்பு.

(எம்.எம்.ஜபீர்)

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் இவ்வருடத்திற்கான கிழக்கு மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள்  மத்தியமுகாம் சாளம்பைக்கேணி பல்தேவை மண்டபத்தில் அண்மையில்  தெரிவு செய்யப்பட்ட சங்கங்களிற்கு கையளிக்கப்பட்டன.

இதன்போது சாளம்பைக்கேணி-03 குறைசியா முதியோர் சங்கத்திற்கு மழை காலங்களில் ஜனாஸா நல்லடக்கத்தின் போது கப்று வெட்டுவதற்காக பயன்படுத்துவற்கான கூடார தொகுதியும்,  சாளம்பைக்கேணி-03  நியூவே இளைஞர் கழகத்திற்கு அலுவலக தளபாடங்களும் கையளிக்கப்பட்டன.



சாளம்பைக்கேணி-03 சமூக இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.எம்.றியாழ் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் ஏ.அப்துல் மஜீட், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் ஏ.சீ.நிஸார், சாளம்பைக்கேணி-03 கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எஸ்.எச்.அன்வர், நுராணிய ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஜெ.செயின், முதியோர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment