கொழும்பு ரோயல் கல்லுாாியின் 165 வது பரிசளிப்பு விழா.

(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு ரோயல் கல்லுாாியின் 165 வது பரிசளிப்பு விழா நேற்று 16 நவங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதம மந்திரி  ரணில் விக்கிரமசிங்க கல்லுாாியின் பழைய மாணவா்களான  அமைச்சா் அகில விராஜ் காரியவாசம், ரவுப் ஹக்கீம், பைசா் முஸ்தபா, சாகல ரத்நாயக்க, கயந்த கருநாதிலக்க,  ரவி கருநாயக்க ஆகியவா்களும் கலந்து கொண்டு 2014 -15 ஆண்டுகளில் கல்வி, கலை, கலா்சசாரம், கண்டுபிடிப்பு விளையாட்டு ஆகிய துறைகளில் உச்ச திறமைகளை காட்டியவா்களும்  சாதாரண தரங்களில் 9 ஏ  உயா்தரத்தில் 3 ஏ  திறமைச் சித்திகளை பெற்றவா்களுக்கும் அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தாவது - 

பாடசாலை மாணவா்களுக்குகிடையே நிலவுகின்ற போட்டிகளை விட பெற்றோா்கள் பெரிதும் போட்டி விரக்தி  மற்றும் பரீட்சைகளில் தமது பிள்ளைகளை எப்படியாவது பரீட்சியில்  சித்தியடையச் செய்ய வேண்டும் என பிரயத்தனம் செய்கின்றனா்  பரீட்சையில் சித்தியடையத் தவரும்   பிள்ளைகள் விரக்தி போன்ற சில சம்பவங்கள் அறியக் கூடியதாக உள்ளது.  

மாணவா்களை பரீட்சையில் சிறந்த பெறுபேறுக்காக  போட்டி  பொறாமை ஏற்படுத்தாது  பெற்றாா்களக்கும் கல்வியமைச்சு அறிவுரைகளை வழங்கும்  கருத்தரங்குகளை  நடாத்துமாறு  ஜனாதிபதி கல்வியமைச்சரை வேண்டிக் கொண்டாா்.

அண்மையில் என்னைக் காண வந்த ஒரு பல்கலைக்கழக உபவேந்தா் கூறியதாவது பல்லைக்கழகத்திற்குள் வந்து போதைப்பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றதாக  தெரவித்தாா்.  இதனால் போதைப்பொருள் பாவணையாள் மாணவா்கள் துாண்டப்படுகின்றனா். எனவும் கூறினாா்.

பாடசாலைகளில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிட்சையில்   இருந்து பெற்றோறும் மாணவா்கள் அந்தப் பரீட்சையில் சித்தியெய்வதற்காக தமது பிள்ளைகளை  பல பிரயத்தனங்கயும்  அர்ப்பண்த்தினையும்  செய்கின்றனா். இதில் ்இருந்து மாணவா்களுக்கிடையே போட்டி பொறாமை சிறுபிரயாத்திலேயே ஏற்படுத்தப்படுகினறது.    பரீட்சையில் சித்தியெ்யாத மாணவா்கள் விரக்தியுற்ற சில சம்பவங்களும் அண்மையில் பதிவாகியுள்ளன. இவற்றில் இருந்து மாணவா்கள் நல்ல சிறந்த ஒழுக்க கட்டமைப்புகள் பாடசாலையிலும் பெற்றாா் மடடத்திலும் உருவாக்கப்படல் வேண்டும். 

கொழும்பு    ரோயல் கல்லுாாியில்  கற்றவா்கள் பிரதம மந்திரி தொடக்கம் அமைச்சரவையிலும்  பல அமைச்சா்கள் இங்கு மேடையில்  உள்ளனா். இதனால் இப் பாடசாலை இலங்கையில் மட்டுமல்ல உலகிலும் சிறந்ததொரு நாமத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதிபரின் அறிக்கையின் படி இக்கல்லுாாி ஆசியா மட்டத்தில பல சாதனைகளையும் கீா்த்திகளையும் ஏற்படுத்தியுள்ளது.












Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment