சந்தையில் அனைவரும் பார்த்துப் பழகி அலுத்துப் போன தொழில்களை செய்யாதீர்கள்.

சந்தையில் அனைவரும் பார்த்துப் பழகி அலுப்பு ஊட்டக்கூடிய தொழில்களை விட்டுவிடுங்கள். பக்கத்துவீட்டுக்காரர் என்ன செய்கிறார் என்று பார்த்து அதையே நீங்களும் செய்யாதிருங்கள்.

நாம் அனைவரும் வித்தியாசமானவர்கள், எனவே உங்களுக்கு ஏற்ற தொழில்களை (business) செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெறவேண்டும் என்றால், உங்களுக்கென்று தனி பாணியை உருவாக்குங்கள்.

 தனித்தன்மை வாய்ந்த தொழிலை தொடங்குங்கள். நீங்கள் சார்ந்த துறையில், நீங்கள் விற்கும் பொருள் (product) மற்ற அனைத்தையும் விட சிறந்ததாக இருக்கட்டும்.

Business is all about solving problems நீங்கள் தொடங்கும் தொழில் புதிய பிரச்சனைக்கு (problems) தீர்வு கொடுப்பதாகவோ (solutions) அல்லது பழைய பிரச்சனைக்கு புதிய வகையில் தீர்வு கொடுப்பதாகவோ இருக்கட்டும்.

பல்வேறு புதிய தொழில்கள் இருக்கின்றன நாம் தான் அதனை அறிய வேண்டும் ஏராளமான தொழில்நுட்பங்கள் உள்ளன. அவற்றை கண்டறிந்து, நீங்கள் ஒரு புதிய பொருட்களை உருவாக்குங்கள்.

திருபாய் அம்பானி பாலியஸ்டர் (polyester) தொழில் தொடங்கும் போது அவர் தொழில் குறித்து ஏதும் தெரிந்திருக்கவில்லை, பின்னர் அவர் அவற்றை கற்றுக்கொண்டார்.

ரிச்சர்ட் பிராண்சன் (Richard Branson) வெர்ஜின் க்ரூப் (Virgin Group) முதலாளி, அவர் வெர்ஜின் அட்லான்ட்டிக் என்னும் விமான சேவையை தொடங்கும் போது விமான தொழிலே அவருக்கு தெரியாது.

தேவைப்படுவதெல்லாம் உங்களுக்கு எதையாவது செய்யவேண்டும் என்னும் வெறி, சந்தையில் உங்களுக்கு என்று ஒரு அடையாளம் உருவாக்கவேண்டும் என்பது தான்.

புதிய தொழில்நுட்பங்களை தேடுங்கள், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளுங்கள், அவற்றை விடா முயற்சியுடன் முயன்று பாருங்கள். நிச்சயமாக வெற்றி கிட்டும்.

ஞாபகம் இருக்கட்டும், ஐ போன் (i-phone) அறிமுகம் செய்யும் முன் ஆப்பிள் (apple) நிறுவனம் கணினி தயாரித்து விற்பனை செய்து வந்தது. அவர்கள் புதியதாக, போன் சந்தையில் பல புதிய தொழில்நுட்பங்களை களமிறக்கினார்கள், இன்று ஜொலிக்கிறார்கள் .

நீங்கள் எந்த சந்தையில் நுழைகிறீர்கள் என்பது முக்கியமில்லை, தெரிந்த தொழிலா தெரியாத தொழிலா என்பது முக்கியமில்லை, நீங்கள் நுழையும் சந்தையில் உங்கள் பொருள் ஒரு புரட்சியை ஏற்படுத்தவேண்டும். அப்படித்தான் நீங்கள் உங்களுக்கான தொழிலையும் பொருளையும் தேர்ந்தெடுக்கவேண்டும்

என்னுடைய வேண்டுகோள் புதிய தொழிலை (new business), புதிய பொருளை (new product), புதிய சந்தையை (new market), புதிய தொழில்நுட்பத்தை (new technology) உருவாக்குங்கள் என்பதே.

தகவலுக்கு நன்றி - தமிழ் தொழில் முனைவர்


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment