சம்மாந்துறையில் இடம்பெற்ற மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 17 ஆவது ஆண்டு நிறைவு ஞாபகாத்த மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி சம்மாந்துறை முஹர்ரம் யுனைட்டட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்பாளரும் முன்னாள் பிரதேச உறுப்பினருமான ஏ.எச்.எம்.புவாட் தலைமையில் சம்மாந்துறை பொது மைதானத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம்.மாஹிர், ஆரிப் சம்சுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ.காதிர், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உப்பில் பியலால், விளையாட்டு உத்தியோகத்தர், இளைஞர் சேவை அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதில் சம்மாந்துறை எஸ்.எஸ்.சீ.விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிதிகள் கொளரவிக்கப்பட்டனர்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment