2002ம் ஆண்டு ஹரீஸ் எம்பியவர்களின் தியாகமும், ஹக்கீமின் அவர்களின் காட்டிக்கொடுப்பும்..!

மடவளை நீயூஸில் ஒருகட்டுரையொன்று வெளியாகியிருந்தது அது, "பாசிச புலிகளால் அச்சத்தில் உறைந்த கல்முனை" என்ற தலையங்கத்தில் வந்த கட்டுரையாகும்.

அதிலே 2002ம் ஆண்டய காலப்பகுதியில் (ரணில், பிரபா ஒப்பந்தம் அமுலில் இருந்த காலமாகும்) கல்முனை நகரத்தை புலிகள் தாக்குதல் நடத்தியும், கொள்ளையடிப்பதற்கும் முயற்சித்த வேளையில் கல்முனையின் எம்பியாக இருந்த ஹரீஸ் அவர்கள் தனது உயிரையும் மதியாது அந்த நகரத்தை தூக்கத்தை இழந்து காப்பாற்றினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த விடயம் நூற்றுக்கு நூறு உண்மையானது என்பதை, அந்த காலப்பகுதில் நடந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் என்ற முறையில் நாங்களும் அதனை அறிந்ததிருக்கின்றோம், அதனால் ஹரீஸ் எம்பியவர்களை அந்த விடயத்துக்காக பாராட்டாமல் இருக்கமுடியாது.


ஆனாலும், அவர் பதிவிட்ட கட்டுரையின் மூலம் இன்னுமொரு முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளதையும் நாம் அவதானிக்க வேண்டும். 2002 ம் ஆண்டளவில் புலிகளுக்கும் அன்ற பிரதமராக இருந்த ரணில் அவர்களுக்குமிடையிலே, நோர்வே நாட்டின் அனுசரனையோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில் இந்த யுத்தத்தால் பாதிக்கபபடிருந்த முக்கிய தரப்பான வடகிழக்கிலே வாழும் முஸ்லிம்களைப் பற்றியோ, அல்லது அவர்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் என்பதைப்பற்றியோ, எந்தவிதமான கருத்தையும் தெறிவிக்காமல் வெறுமனே "குழுக்கள்" என்று மட்டும் குறிப்பிட்டு ரணிலும் பிரபாகரனும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

அந்த ஒப்பந்தம் செய்யப்படும் போது ரணிலின் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவும், பங்காளிக் கட்சியாவும் இருந்தவர்தான் இன்றைய மு.காங்கிரஸ் தலைவர் ரஹுப் ஹக்கீம் அவர்களாவார். அவர் இந்த ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என்று அந்த ஒப்பந்தத்திலே எழுதவைப்பதற்கு தவறியிருந்தார். அந்த ஒப்பந்தத்தின் காரணமாக வடகிழக்கிலே சுந்திரமாக செயல்பட்ட பாசிச புலிகள், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்களின் உயிர்களிலும், உடமைகளிலும் கை வைக்கத்துவங்கினார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்புக் கொடுப்பதற்கு இலங்கை ராணுவமும் பொலிசாரும் இந்த ஒப்பந்தத்தை காரணம் காட்டி, உதவி வழங்குவதற்கு மறுத்துவிட்டார்கள். அன்று இதனை தங்களுக்கு சார்பாக பயன்படுத்திய பாசிச புலிகள் முஸ்லிம் கிராமங்களையும், முஸ்லிம்களின் உயிர்களையும் வேட்டையாடத் துவங்கியிருந்தார்கள், அதன் உச்சக்கட்டமாகத்தான், வாழைச்சேனையில் அவர்களால் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த முஸ்லிம் மையத்துக்களை நல்லடக்கம் செய்வதற்காக கொண்டுவந்த போது, அந்த மைத்துக்களை பொலிசாரும் ராணுவமும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே முஸ்லிம்களின் கண்முன்னே டயர் போட்டு எறித்தார்கள் இந்த பாசிச புலிகள். 

அதனைத் தடுக்குமாறு இலங்கை ராணுவத்திடம் முஸ்லிம்கள் மன்றாடிய போதும், தங்களால் உங்களைப் பாதுகாக்க முடியாதென்றும், அப்படி நாங்கள் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் ஒப்பந்தப்படி நாங்கள்தான் தண்டிக்கப்படுவோம், அதனால் உங்களுக்கு உதவி செய்ய எங்களால் முடியாது என்று ராணுவம் மறுத்துவிட்டது.


இதனைச் சாதகமாக பயன்படுத்திய பாசிச புலிகள் நிராயுதபாணிகளான முஸ்லிம்களின் உயிர்களையும், பொருளாதாரங்களையும் குறிவைத்து தாக்கி, கடைகளையும் கொள்ளையடித்தும் வந்தார்கள். 

அந்த நேரத்தில்தான் கல்முனை நகரத்தையும் புலிகள் கொள்ளையடித்துவிட்டு, அந்த நகரத்தையும் எறித்துவிடும் நோக்கத்தோடு வந்தபோதுதான் ஹரீஸ் எம்பி அவர்கள் அதனை முன்னின்று தடுத்த விடயம் நடந்ததேறியது.


அந்த இக்கட்டான நிலையில்தான் ஹரீஸ் எம்பி அவர்கள் தனது கட்சியின் தலைவரான ஹக்கீம் அவர்களின் கவணத்துக் இந்த விடயத்தை கொண்டு வந்ததாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஹக்கீம் அவர்கள் தான் பிரதமர் ரணில் அவர்களிடம் பேசியதாகவும் அதற்கு பிரதமர் ரணில் அவர்கள் தனக்கு ஒன்றுமே செய்ய முடியாது என்று கைவிரித்து விட்டதாகவும் கூறிவிட்டு, அதனால் தனக்கும் ஒன்றும் செய்யமுடியாத நிலையிலிருப்பதாகவும் கூறியிருக்கின்றார். அதே நேரம் நிலமையை நீங்களாகவே பார்த்து தீர்த்துக்கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். (இவர்தானா முஸ்லிம்களின் தலைவன் என்று யோசித்துப்பாருங்கள்)

அப்படியென்றால் ஒருநாட்டின் பிரதமர் முஸ்லிம் சமுதாயத்தை பாசிச புலிகளிடம் தாரைவார்த்துக் கொடுத்த விடயத்துக்கு, மு.காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் அவர்களும் துணையாக இருந்துவிட்டு, முஸ்லிம்கள் புலிகளால் பாதிக்கப்படும் போது எங்களுக்கு ஒன்றும் செய்ய முடியாதென்று மறுத்த விடயமானது மனித குலத்திற்கே கேவலமான செயல் என்பதை நாம் இடத்தில் புரிந்து கொள்ளவேண்டும்.

இதே போன்றுதான் பல விடயங்களில் தலைவர் ஹக்கீம் அவர்கள் நடந்துகொண்டு வருகின்றார் என்ற விடயத்தையும் அரசியல் அவதானிகள் கூறிவருகின்றார்கள். இதே போன்றுதான் 18வது திருத்தத்திற்கும், தெவிநெகும திட்டத்திற்கும், இப்போது நடக்கும் அரசியல் திருத்தங்களுக்கும் ஆதரவு வழங்கிவிட்டு பின்னாலில் எனக்கு ஒன்றும் தெறியாது என்று சொல்பவர்தான் இந்த ஹக்கீம் அவர்கள்.

ஹக்கீம் அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதற்கு 2002ம் ஆண்டைய ஒப்பந்தமே சாட்சியாகும், அதற்கு ஹரீஸ் எம்பி அவர்களின் கூற்றும் அதற்கு ஆதாரமாகும், என்பதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.


ஆகவே, ரணில் யார்? ஹக்கீம் யார்? என்று முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ளாதவரை, முஸ்லிம் சமூகத்தை அந்த இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்பதே எங்கள் கருத்தாகும்.

ஏனென்றால் ஒரு சமூகம் திருந்தாதவரை அந்த சமூகத்தை நானும் திருத்தமாட்டேன் என்று இறைவன் கூறுகின்றான் என்பதே உண்மையாகும்.


எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை..
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment