ஞானசாரா மஹந்தவின் ஆளென்றால் மஹிந்தவிடம்தானே உலமாசபை பேசவேண்டும்..!


உலமாசபை ஞானசாராவுடன் பேசுவதற்கு பதிலாக அதனை பின்னாலிருந்து இயக்கும் மஹிந்தவுடன் பேசுவதனால்தானே பிரச்சினைக்கு முடிவுகட்டமுடியும் என்ற உண்மை தெறியாதா?

ஞானசாரா அவர்களுடன் நமது மதிப்பிற்குறிய ஜம்மியதுல் உலமா சபையினரின் அனுசரணையுடன் படித்த புத்திஜீவிகளும் சேர்ந்து மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு, நான்காம்கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராவதாக ஊடகங்களின் மூலம் அறிந்து கொண்டோம்.

இந்த இடத்தில் ஒரு ஐயம் ஏற்படுகின்றது, பொதுபலசேனாவை பின்னாலிருந்து இயக்குவது முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களும், அவருடைய தம்பியான கோத்தாபாய ராஜபக்ஸவும்தான் என்று பரவலாக பேசப்பட்டது மட்டுமல்ல, அந்த பிரச்சாரத்தை முன்வைத்தே மஹிந்தவின் ஆட்சிக்கு எதிராகவும் முஸ்லிம் மக்களைத் வாக்களிக்கத் தூண்டி வெற்றியும் அடைந்திருந்தார்கள்.

அப்படியென்றால் சாட்சிக்காரனின் காலில் விழுவதைவிட சண்டைக்காரனின் காலில்விழுந்தால் பிரச்சினையை இலேசாக முடித்துவிடலாம் என்று முன்னோர்களின் வாக்குக்கு இனங்க, யாரோ இயக்க பின்னாலிருந்து படமெடுக்கும் பாம்பான ஞானசாராவுடன் பேசுவதை விட, இவரை பின்னாலிருந்து இயக்கும் மஹிந்தவிடமும், கோத்தாவுடனும்தானே பேசவேண்டும், அதுதானே நியாயம்.

நீங்கள் ஞானசாராவுடன் பேசி அவரை மடக்கிவிட்டால், கோத்தாபாய இன்னொரு ஞானசாராவை விலைக்கு வாங்கி அவரையும் பின்னாலிருந்து இயக்கத்துவங்கினால், நீங்கள் அவரிடமும் போய் மண்டியிடுவீர்களா? என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

இங்கே ஒருவிடயத்தை நாம் ஆழமாக யோசிக்கவேண்டும், இந்த ஞானசாராவுக்கு பின்னால் இருப்பது கோத்தாபாய ராஜபக்ஸ என்றால் அவரிடம் சென்று உண்மையை எடுத்துக்கூறி, அவர் மூலமாக பிரச்சினைக்கு முடிவை ஏற்படுத்தலாம் அல்லவா? ஏன் அதனை நீங்கள் செய்ய முயற்சிக்கவில்லை என்று தெறியவில்லை.

ஏனென்றால், உங்களுக்கு நன்றாகவே தெறியும்.! ஞானசார அவர்கள் யாருடைய ஆள் என்று. அதனால்தான் அவரை பின்னாலிருந்து இயக்கும் சக்திகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே நீங்கள் இந்த விடயத்தில் செயல்படுகின்றீர்கள் என்பது.

இந்த நல்லாட்சி அரசாங்கம் ஞானசாரா அவர்களுக்கும், அவருடைய பங்காளிகளுக்கும் பதவிகளை வழங்கியும், இதற சலுகைகளை வழங்கி வருவது மட்டுமல்ல, அவரை பல விடயங்களில் காப்பாற்றியும் வருகின்றது. அவர் எதைச்செய்தாலும் இந்த அரசாங்கம் கண்டுகொள்வதேயில்லை என்பதை நாடே அறியும், ஏன் நீங்களே அறிவீர்கள்.

உண்மையிலேயே இந்த ஞானசார அவர்கள் நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் மாட்டிக்கொள்ளாமல் விட்டிருந்தால், உங்களை அழைத்துப் பேச விரும்பியிருப்பாரா? என்ற கேள்வியும் எழுகின்றது அல்லவா?

அவருக்கு தேவையொன்று இருக்கிறது, அதனால்தான் ஞானசார அவர்கள் ஏதோவொரு திட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுடன் பேசவேண்டும் என்று உங்களை அழைத்துள்ளார் என்ற விடயம் தெளிவாகின்றது. அல்லாது விட்டால் அவர் இப்படி மனம்திருந்தி உங்களுடன் பேச வந்திருக்க மாட்டார் என்பது குழந்தைப் பிள்ளைக்கும் தெறிந்த விடயம்தான்.

அதே நேரம் இன்னொரு விடயத்தையும் இங்கே குறிப்பிடவேண்டும். மஹிந்த ராஜபக்சவுடன் அரசியல் ரீதியில் கோபமாகவுள்ள சில முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் இப்படிப்பட்டவர்களின் இனவாத நடவடிக்கைகளுக்கு பின்னாலிருந்து தூபமிட்டவர்கள் என்பதை, இந்த விடயங்களை உண்ணிப்பாக கவணித்துவரும் புத்திஜீவிகள் அறிவார்கள்.

இதற்கெல்லாம் ஒரே காரணம், இதன் மூலம் நமது அரசியல் எதிரியை பழிவாங்கிவிடவேண்டும் என்ற கீழ்தரமான என்னமேயாகும்.  இதனால் பாதிக்கப்படுவது நமது முஸ்லிம் சமூகம் அல்லவா? என்ற எந்த குற்ற உணர்வும் இல்லாமல்தான் இவர்கள் அந்தநேரம் செயல்பட்டு வந்துள்ளார்கள் என்பது தெளிவானதுதான்.


இருந்தாலும் இப்போது அவர்களின் நிலைப்பாடு, முஸ்லிம் சமூகத்தை காப்பாற்றுவது என்பதற்கு அப்பால், அவர்களுக்கு விருப்பமான ஆட்சியை காப்பாற்றவேண்டும் என்ற என்னமேயாகும்.

அதனால்தான் இந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஒன்றுமே நடந்துவிடக்கூடாது என்று துடியாய் துடிக்கின்றார்கள். இவர்கள் மஹிந்த ஆட்சியில் இப்படியான முயற்சியில் ஈடுபடுவதற்கு பதிலாக, எறியும் நெருப்பிலே எண்ணெய்யைத்தான் ஊற்றிக்கொண்டிருந்தார்கள் என்பதே உண்மையாகும்.


ஆகவே மஹிந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு பூரண உதவிகளைச் செய்த ஞானசாரா அவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று முயற்சிக்கும் நபர்களுக்கு பின்னால் நமது உலமா சபையினரும் செல்லுகின்றார்கள் என்றால், அதனை எந்த விடத்திலும் நியாயப்படுத்தவே முடியாது.

இந்த விடயத்தினூடாக, சூழ்ச்சிக் காரனுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரனான அல்லாஹுவை யாரும் ஏமாற்றமுடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள மறக்கக்கூடாது என்பதே எங்களின் என்னமாகும்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment