இஸ்லாமிய கொள்கைவாதிகள் சமூகத்தை கூறு போடுகிறார்கள்.

ABM - அசீம்

இஸ்லாமிய இயக்கங்களிடையே  கொள்கை நிலைப்பாட்டில் நிறையப் பிளவுகள் உள்ளன.இவைகள் முஸ்லிம்களை ஒன்றுபடுத்துவதற்குப் பதிலாக சமூகத்தை பலகூறுகளாக பிரித்துள்ளன. 

ஒவ்வொரு இஸ்லாமியனும் தன்னை இயக்கசார்பு கொள்கைவாதியாக மாற்றிக்கொண்டுள்ளமை இயக்கத்தின்மீதான வெறித்தனத்தை அப்பட்டமாக காட்டுகிறது. இஸ்லாம் நன்றாக இருக்கவேண்டும் என்பதைவிட தான் சார்ந்திருக்கும் இயக்கம் நன்றாக இருக்கவேண்டும். மக்கள்மத்தியில் பிரபலமடையவேண்டும் என்றே நினைக்கின்றான்.

இயக்கவெறி காரணமாக இஸ்லாம் குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது. அது போதிக்கின்ற சமாதானம்,மனிதாபிமானம், மக்கள் ஐக்கியம் போன்ற அனைத்தும் சிதைக்கப்பட்டு கருத்துமோதல்கள் தீவிரம்பெற்றுள்ளன. இது சிலநேரங்களில் வன்முறைகளாக வெடித்து சகோதர உயிர்களைக்கூட பலியெடுத்ததை நாம் அறிந்துள்ளோம்.

ஏன்,நம்மை   இயக்கவெறி இந்தளவுதூரம்  ஆக்கிரமித்துள்ளது. இந்நிலைமை 20 வருடங்களுக்குமுன் இருக்கவில்லையே. எல்லோரும் இஸ்லாமியர்கள் என்ற ரீதியில் ஒற்றுமையாகத்தானே வாழ்ந்தோம். அதன்பின்னால் எப்படி இயக்கப்பிரிவினை வந்தது? என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்.

மதங்கள் மனிதர்களை பிரிப்பதற்கல்ல.இனைப்பதற்கே என்று அன்னியர்கள்கூட சொல்லும்போது,எம் சத்தியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்ற நாம் தவறான முன்னுதாரத்தை மாற்றுமதத்தவர்களுக்கு கொடுத்துகொண்டிருக்கிறோம்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment