நீதிமன்ற உத்தரவையடுத்து வீதி மறியல் போராட்டம் வாபஸ்! இன்று கல்முனையில் மீண்டும்ஹர்த்தால் ?

காரைதீவு சகா.

சாயந்தமருதில் உள்ளுராட்சிசபையைவேண்டி நடாத்தப்பட்டுவரகின்ற மக்கள்எழுச்சிப்போராட்டம் ஹர்த்தால் நேற்று(31) வீதிமறியல்போராட்டமாக உருவெடுத்திருந்தது.அதனை விலக்கிக்கொள்ளுமாறு அங்கவந்த பொலிஸ் உயரதிகாரிகள் வேண்டுகோள்விடுத்திருந்த போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்கு இணங்கவில்லை.

அதனால் பொலிசார் நீதிமன்றத்தில் தடையுத்தரவைப் பெற்றுக்கொண்டு அதனை பள்ளிவாசல் நிருவாகத்திடம் கொடுத்தனர். அதன்பின்னர் நேற்று இரவு வீதி மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.


அதன்பின்னர் அதேவீதியில் மார்க்க நிகழ்வகளை நடாத்தி அங்கிருந்து விடைபெற்றனர்.

இருப்பினும் இன்று(1) புதன்கிழமையும் அங்க ஹர்த்தால் கடையடைப்புப்போராட்டம் தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று புதுவடிவம் பெறலnமென தெரிகிநது.


இதேவேளை கல்முனையை நான்காகப் பிரிக்கக்கோரியும் சாய்நதமருதுக்கு தனியான சபை வழங்கக்கூடாதென்று கோரியும் இன்றும் நாளையும் கல்முனையில் ஹர்த்தால் ஆர்ப்பாட்டம் இடம்பெறவிருப்பதாக மற்றுமொரு ஊர்ஜிதமான தகவல் தெரிவிக்கின்றது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment