கல்முனை-சாய்ந்தமருதில் பொது சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரீட் முஹம்மத்.

அரசியல் வாதிகள் பொது வசதிகளை அமைக்க நிதிகளை மாத்திரமே ஒதுக்க முடியும் அதை பாதுகாக்க வேண்டியது குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள ஒவ்வொருவரினதும் பொறுப்பு ஆனால் கல்முனை குடி சாய்ந்தமருதில் அமைக்கப்படுகின்ற பொதுவசதிகள் காலம் காலமாக பாதுகாப்பதற்கு பதிலாக சேதப்படுத்தப்ப ட்டே வருகின்றது இந்த செயட்பாடு மாறவேண்டும்.

அரசியல்வாதிகள் நிதி ஒதுக்குவதும் அதை சேதப்படுத்துவதும் அரசியல்வாதிகளை திட்டி தீர்ப்பதும் மீண்டும் அவர்கள் நிதி ஒதுக்குவதுமான செயற்பாடு தொடர்ச்சியாக இவ்விரு ஊர்களிலும் இடம்பெற்று வருகின்றது. 

பொது சொத்தை பாதுகாப்பது, பராமரிப்பது ,அதை அமைக்க உதவுவது எல்லாம் இபாதத் என அறிவுறுத்தும் எமது புனித மார்க்கத்தை பின்பற்றும் மக்களை நூறுவீதம் கொண்ட இவ்விரு ஊர்களிலும் இவ்வறாரான செயற்பாடுகள் இடம்பெறுவது கவலையான விடயம்.

இதைப்பற்றிய விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்த ஒவ்வொரு பள்ளிவாசல்களும், பொது அமைப்புக்களும் முன்வருவதுடன் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு பொது சொத்துக்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட வேண்டும்.

அத்துடன் இவற்றை பாதுகாக்க தேவையான அணைத்து முன்னெடுப்புக்களையும் எடுப்பதுடன் மாற்றமாக செயற்படுபவர்களை இனம்கண்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க கல்முனை மாநகர சபையும் கல்முனை போலீசும் முன்வர வேண்டும்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment