மக்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம்.

எம்மை எதிர்ப்பதாக எண்ணி, எம் பணிகளை குழப்பி, எம் மக்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம்.

நுவரெலியா மாவட்டத்தில், புதிதாக உருவாகும் பிரதேச சபைகள் அமையும் அனைத்து பிரதேங்களிலும், பிரதேச செயலகங்கள் அமைய வேண்டும் என்பது எம் நிலைப்பாடு.

இதுபற்றி ஏற்கனவே உள்நாட்டலுவல்கள் அமைச்சர் நண்பர் வஜிர அபேவர்தனவுடன் எமக்கு பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன.

பிரதேச சபை என்பது அரசியல் அதிகார பகிர்வு. பிரதேச செயலகம் என்பது நிர்வாக அதிகார பகிர்வு. ஒரு இனத்தின் எழுச்சிக்கு அரசியல் அதிகாரம், நிர்வாக அதிகாரம் என்ற இரண்டும் தேவை. இந்த தெளிவான பாதையில் நாம் பயணிக்கிறோம்.

அதேபோல், எதை முதலாவதாக செய்வது, எதை இரண்டாவதாக செய்வது, எதை எப்படி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தமிழ் முற்போக்கு கூட்டணி தொலைநோக்குடன் திட்டமிட்டு செயற்படுத்துகிறது. இதில் எவருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை.

பிரதேச சபை உருவாக்கப்பட்ட 1987ம் ஆண்டிலிருந்து பதவியில் இருந்தபடி சும்மாவே இருந்தவர்களுக்கு, இன்று எங்கள் ஆளுமையையும், பணிகளையும் பார்த்து காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே வாயில் வந்ததை பேசி எமது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை குழப்ப முயல்கிறார்கள்.

இவர்களை நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் ஒன்றும் இங்கே இப்போ இந்த விஷயத்தில் வெட்டி முறிக்க தேவையில்லை. எப்போதும் இருந்ததை போல் தொடர்ந்தும் அப்படியே "கோமா"வில் இருந்தாலே போதும். நடக்கும் நல்லவை நல்லபடியே நடக்கும்.

ஆகவே எம்மை எதிர்ப்பதாக எண்ணி, எம் பணிகளை குழப்பி, எம் மக்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment