அவதுாறு வழக்கில் சத்தியம் வென்றது.!! பா.உ. மன்சூருக்கு கோடியில் நஷ்டஈடு கிடைத்தது.


பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களினால் 2013ஆம் ஆண்டு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் சுடர் ஒளி பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மானநஷ்ட வழக்கு இணக்கப்பாட்டிற்கு வந்ததன் காரணமாக குறித்த நிறுவனத்தினரிடமிருந்து பாராளுமன்ற உறுப்பினருக்கு 1கோடியே 3இலட்சம் ரூபாய் நஷ்டஈட்டுத் தொகையினைப் பெற்றுக் கொண்டார்.

கடந்த 2013ஆண்டு மே மாதம் 15ஆம் (2013.05.15) திகதி சுடர்ஒளி பத்திரிகை நிறுவனம் புதிதாக வெளியிட்ட ‘முஸ்லிம் முரசு’ வாராந்த பத்திரியின் முதலாவது இதழில் அப்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகவிருந்த மன்சூருக்கு எதிராக பொய்யான தகவல்களை வெளியீட்டருந்தது. இச்செய்தியானது இது தனது கௌரவத்திற்கும், மானத்திற்கும் பங்கமேற்படுத்தியுள்ளதாக தெரிவித்துவித்து அப்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராவிருந்த எம்.ஐ.எம்.மன்சூரினால் குறிப்பிட்ட பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக 500 மில்லியன் ரூபாவை தனக்கு நஸ்டஈடாகத் தர வேண்டுமென்று கோரி தனது சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மூலம் வழக்கொன்றை தொடுத்திருந்தார்.

குறித்த வழக்கினால் குறித்த நிறுவனம் இது தொடர்பாக வெளியீட்டிருந்த செய்தி சம்பந்தமாக நீதிமன்றத்தில் எந்தவித ஆதாரத்தினையும் முன்வைக்காமையினால் இதனால் சுடர் ஒளி நிருவனம் பல்வேறு சிக்கல்களையும், நெருக்கடிகளையும் எதிர்நோக்கி வந்திருந்தது. 

இந்நிறுவனத்தின் முகாமையாளரான பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவனபவன் அவர்கள் மன்சூர் எம்.பி அடிக்கடி சந்தித்து இது தொடர்பாக இணக்கப்பாட்டிற்கு வருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தனக்கு கொஞ்சமாவது நஷ்டஈடு தர வேண்டும் என்பதோடு, தாம் வெளியீட்டு செய்து எந்தவித உண்மைத்தன்மையற்றது என தங்களது பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும். என்ற நிபந்தனையின் அடிப்படையில் இருதரப்பின் இணக்கப்பட்டிற்கு வந்ததன் காரணமாக வழக்கு முடிவுக்கு வந்தது.

அன்று மாகாண அமைச்சராகவிருந்த மன்சூர் அவர்களின் அரசியல் வளர்ச்சியினைப் பொறுக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்சி கொண்டவர்களினால் பரப்பட்ட பொய்யான பரப்பட்ட செய்தியின் மூலமாக அது சம்பந்தமான தொடுக்கப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்ததனையடுத்து மன்சூர் எம்.பிக்கு ஒரு கோடியே மூன்று இலட்சம் ரூபாய் நஷ்டஈட்டுத் தொகை கிடைத்துள்ளது.

இது சம்பந்தமான மறுப்புச் செய்தி சுடர் ஒளி பத்திரிகையில் பிரசுரமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment