பூர்வீக இடங்களில் மீள் குடியேற காத்திருக்கும் வடமாகாண முஸ்லிம்களிடம் தேசிய ஷூரா சபை அவசர வேண்டுகோள்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வடமாகாணத்தில் இருந்து நீண்ட காலமாக இடம்பெயர்ந்திருப்பவர்களை மீள்குடியேற்றுவதற்கான விஷேட செயலணி (TFR) மேற்கொள்ளும் - உள்ளக இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான- மக்கள் தொகைமதிப்பு தொடர்பான பத்திரங்களை பூர்த்தி செய்து16/10/2017 ஆம் திகதியிற்கு முன்னர் பிரதேச கிராம சேவை அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
 
இது தொடர்பான அறிவித்தல் கடந்த20/09/2017 பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட்டதோடு, மாவட்ட செயலாளர்கள், பள்ளிவாயல்களூடாகவும், சமூக ஊடகங்களூடாகவும் பாதிப்புற்ற மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக விஷேட செயலணி (TFR) தேசிய ஷூரா சபைக்கு தெரிவித்துள்ளது.
 
மேற்படி உத்தியோகபூர்வமான தொகைக் கணிப்பீட்டின் மூலம் பெறப்படும் தரவுகள் புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது, அந்த வகையில் இந்த சந்தர்ப்பத்தை இடம்பெயர்ந்து வாழும் வடபுல முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ள தவறிவிடக்கூடாது.
 
இன்னும் இரண்டொரு தினங்களே எஞ்சியுள்ள நிலையில் வடமாகாண முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் மஸ்ஜித் நிர்வாகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நாளை ஜும்மாஹ் தினத்திலும் வார இறுதி நாற்களிலும் மேற்படி பதிவினை மக்கள் உரிய முறையில் நிறைவு செய்வதனை உறுதி செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் கட்டாயமாகும்.
 
எதிர்வரும் 2017 நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள இத்தொகைக்கணிப்பிற்காக உங்கள் பிரதேசத்திற்கு வருகைதரும் தொகைக்கணிப்பீட்டாளர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குதல் வேண்டும்.
 
மேலதிக விபரங்களை கிராம சேவை அலுவலர், பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளருடன் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது www.taskforcepidp.lkஎன்ற இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். 
 
கொழும்பு காலி வீதி இல 356 B என்ற முகவரியிலுள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள வடமாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான செயலணியின் கருத்திட்ட முகாமைத்துவ அலகின் கருத்திட்ட முகாமையாளரிடமும் அது குறித்து விசாரிக்கமுடியும்.
 
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
பொதுச் செயலாளர்
தேசிய ஷூரா சபை 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment