நிந்தவூர் அல்-மினா வித்தியாலயத்தில் நடைபெற்ற எளிமையான ஆசிரியர் தினவிழா.

( சத்தியன் )

நிந்தவூர் அல்-மினா வித்தியாலயத்தில் கடந்த வருடம் க.பொ.த (சாஃத ) பரீட்சை எழுதிய பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படட எளிமையான ஆசிரியர் தினவிழா  அல்-மினா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பழைய மாணவர்களான எம்.ஏ.எம்.மிஸ்பாஹி, எம்.எம்.சக்கீப், எம்.ஐ.வஜிஹூல்லாஹ், ஏ.எம்.எம்.சிமார், ஏ.அஸ்வர் ஆகியோர் தாமாக முன்வந்து எமது பாடசாலை ஆசிரியர்களை எம்மால் முடியுமான வரையில் பாராட்டி, கௌரவிக்கப்போகிறோம். என அனுமதி பெற்று இந்நிகழ்வைச் செய்து மகிழ்ந்தனர்.

யாரையும் கஷ்டப்படுத்தாமலும், யாருடைய மன எரிச்சலுக்குட்படாமலும், எந்தப் பெற்றோரின் நச்சரிப்புக்களின்றியும், எந்தவித இலஞ்ச வகைகளுக்கு உட்படாமலும், 'நெக்டோ சோடாவுடனும், வெபஸ் பிஸ்கட்டுடனும்' மனநிறைவாய் முடிவுற்ற இந்த மாணவச் செல்வங்களின் 'ஆசிரியர் தின நிகழ்வை' பாராட்டவேண்டும்.

இதே வேளை இன்று சில பாடசாலைகளில் பல்வேறு விதமான ஊழல், மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டு, ரோசம், மானம் என்னவென்று தெரியாமால் தடுமாறுகின்ற திருட்டு நாய்களான தரங்கெட்ட அதிபர் சிலருக்கு வால்பிடிக்கின்ற சுணைகெட்ட ஆசிரியக் கழுதைகள் ஏழை, எளிய பிள்ளைகள் என்று கூடப் பார்க்காமல் எல்லோரும் ' எங்களுக்கும் கொண்டு வாங்க, எல்லோரும் அதிபருக்கும் கொண்டு வாங்க ' என்று நாவு கூசாமல் கேட்டு வாங்கி, அதிபருக்குக் காரிலும், வேனிலும் ஏற்றி          அனுப்புகின்றனராம் என்று பிராந்திய செய்தியாளர்கள் எமது இணையத்திற்குத் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான அதிபர்களும், ஆசிரியர்களும் நிந்தவூர் அல்மினா வித்தியாலய பழைய மாணவர்களது முன்மாதிரிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கல்வியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment