வித்தியாவின் வீட்டுக்குச் சென்று வித்தியாவின் தாயாருக்கு ஆறுதல் கூறிய ஜனாதிபதி.

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் வீட்டுக்குச்சென்று அவரின் தாயாரை சந்தித்து கலந்துரையாடினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

நேற்று வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி வவுனியா சென்றிருந்தார்.

இந்நிலையில், குடும்பத்தின் சுகதுக்கங்களை கேட்டறிவதற்காக அவரது வீட்டுக்கு வருகை தருவதாக ஜனாதிபதி மாணவி வித்தியாவின் தாயாருக்கு வழங்கிய உறுதிமொழிக்கேற்ப நிகழ்ச்சியின் முடிவில் வவுனியா பிரதேசத்தில் உள்ள அவர்களின் வீட்டுக்கு சென்ற ஜனாதிபதி, குடும்ப உறுப்பினர்களின் சுகதுக்கங்களை கேட்டறிந்தார்.

மாணவி வித்தியாவின் மூத்த சகோதரியின் உயர் கல்வி நடவடிக்கைக்காகவும் அவரது குடும்பத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காகவும் முடிந்த உதவிகளை வழங்குவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

மாணவி வித்தியாவின் கொலைக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியதற்காக ஜனாதிபதி வழங்கிய உதவி குறித்து அவரின் தாயார் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment