சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான அரசாங்கத்தின் இறுதி தீர்மானம் இன்று.


சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான அரசாங்கத்தின் இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக, தெரியவந்துள்ளது. 

எதுஎவ்வாறு இருப்பினும், தனது முடிவு குறித்து அரசாங்கம் இதுவரை எதனையும் தெரியப்படுத்தவில்லை என, சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் பதிவாளர் எச்.ஆர்.குசைன் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, பிரதியமைச்சர் ஹர்சடி சில்வா தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்த அறிக்கையில், சயிட்டம் வைத்திய கல்லூரியை, மாலபே தகவல் தொழிநுட்ப நிறுவனத்துடன் இணைப்பது குறித்த பரிந்துரைகள் இருப்பதாக, தெரிவிக்கப்படுகின்றது. 

சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விரிவுரையாளராக இருந்த பேராசிரியர் நெவில் பெர்ணான்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் பெரும்பாலான பகுதிகள், மாலபே தகவல் தொழிநுட்ப நிறுவனத்துடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment