சாய்ந்தமருதா கொக்கா...!!!

சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கையான தனியான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையானது, அனைத்துக் கட்சிகளின் தலைமைகளாளும் அங்கீகரிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட நிலையில், அதனை வெற்றிகொள்ளுமுகமாக அரசுக்கு அழுத்தத்தை பிரயோகிக்கும் வண்ணம், சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல், உலமா சபை மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றியமும் ஒன்றினைந்து நேற்றிரவு சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் அதன் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமயில் நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் தீர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டது.

எதிர்வரும் திங்கட்கிழமை (30) முதல் தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு கடையடைப்பு.

வயது வந்த அனைவரும் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்று, விஷேட துஆ பிராத்தனையில் ஈடுபடுவது.

உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் பள்ளிவாசல் மேற்கொண்ட முன்னெடுப்புகள் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் பொதுக் கூட்டமும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு வர்த்தக சங்கமானது எதிர்வரும் திங்கட்கிழமை (30) முதல் தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு சாய்ந்தமருது, மாளிகைக்காடு பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க நேற்று இரவு இடம்பெற்ற அதன் விஷேட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment