அண்மையில் சம்மாந்துறையில் நடந்த விபத்தொன்று மனதை கவலையால் மூழ்கடிக்கிறது.

" வீதிகளில் பிறரை பலி கொடுக்கும் நம் கவனயீனம்"

பாதைகளில் நடைபெறும் விபத்துக்களைத் தவிர்க்க அல்லது குறைக்க எத்தனையோ சட்டங்கள் ,விதிமுறைகள், பாதுகாப்புக்கள் இருந்தும் கவலைதரும் வீதி விபத்துக்கள் நடந்த வண்ணம் தான் உள்ளது. செய்திகளோ பத்திரிகைகளோ விபத்தைக் கூறாமல் ஒரு நாளையாவது கடப்பதில்லை. இலங்கையில் ஒவ்வொரு மூன்றரை மணித்தியாலத்துக்கு சுமார் எட்டு பேர் வீதி விபத்துக்களால் மரணிக்கின்றார்கள்.

அண்மையில் சம்மாந்துறை ஊரில் நடைபெற்ற விபத்தொன்று மனதை கவலையால் மூழ்கடிக்கின்றது.

திருமணமாகி வெறும் மூன்றே நாட்கள் , பெண்ணை மட்டும் தாருங்கள் நான் எனது வீட்டிலே வைத்துக்கொள்கின்றேன் என்று திருமணம் முடித்த வாலிப மாப்பிள்ளை தனது மனைவியை முச்சக்கரவண்டியிலே ஏற்றிக்கொண்டு செல்லும் போது கவனயீனத்துடன் Motor Bikeல் வந்தவர் முச்சக்கர வண்டியுடன் மோத , motor bike முச்சக்கர வண்டியினுள் சென்று பொறுக்க முச்சக்கர வண்டி தடம் புரண்டுவிட்டது. அம் மாப்பிள்ளை வாலிபர் முச்சக்கர வண்டியையும் நிமிர்த்தி Motor Bike யையும் வெளியே எடுக்க உதவியுள்ளார். அப்போது அவரின் காதினூடாக இரத்தம் வெளியாவதை அவதானித்தவர்கள் அவரை உடனடியாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அங்கிருந்து உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளார்கள். CT ல் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அங்கே வைத்து இரு வாரங்கள் சிகிச்சை அளித்தும் அவருடைய காலம் முடிவடைந்து விட்டது. 

இன்னாலில்லாஹி வயின்னா யிலைஹி ராஜியூன்.

குருவிக் கூட்டை கல்லெறிந்து கலைத்தது போல் Motor bike ஆல் அடித்துக் கலைத்ததும் நமது ஊர் சகோதரரே. உனது கவனயீனத்தால் ஒரு உயிரைப் பறித்து விட்டாயே! பாவி,


விலைகூடிய புது Motor bike களை வாங்கினால் ஏதோ Airplane ல் பறப்பது போன்று பறக்கின்றீரே! உங்களது நினைப்பும் பொடுபோக்கும் மற்ற மனிதர்களின் உணர்வுகளை மதிக்காத தன்மையும் தான் இவ்வாறான கவலையூட்டக் கூடிய விபத்துகளுக்குக் காரணம். 

உங்கள் கவலையீனங்களால் மற்றவர்களுக்கு கஷ்டமென்றால், நாளை உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்துக்கோ மற்றவர்களின் கவனயீனத்தால் ஏதும் பாதிப்பு வந்தால் என்ன செய்வீர்கள்.


தலையில் Helmet இல்லை , Licence இல்லை, Bike ஒட்ட வயது போதாது, ஒரு Bike ல் இரண்டுக்கு மேற்பட்டவர்கள் ஓடுதல் , கட்டுப் படுத்த முடியாத வேகம் , குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர Traffic Police யை நிறுத்தி அரசாங்கம் தண்டக்கட்டணத்தையும் கூட்டி மக்கள் திருந்துவார்கள் என்று பார்த்தால் முகநூல்களில் 25000/ ரூபாய் அரசாங்கம் என்று கிண்டல் போடுகிறீர்கள்.

நமது சமூகத்தில் இவ்வாறான கவலையீட்டும் கொடூர விபத்துகளென்றாலும் சரி சாதார விபத்தென்றாலும் சரி நமது சமூகம் நிலைமையை சரியாக விளங்கி சட்டதிட்டங்களை மதித்து செயற்படுவோமென்றால் நிச்சயம் நமதூர் மக்களை கொடூர விபத்திலிருந்து பாதுகாக்கலாம் .இன்ஷாஅல்லாஹ்.

நடையிலும் துவிச்சக்கர வண்டியிலும் CD 50 லும் பயணம் செய்த நமதூர் மக்களின் நிலை தற்போது எவ்வளவோ முன்னேற்ற மடைந்துள்ளது. இவற்றைக் காண்பது மிகவும் அரிது.

நமது பிழையை பிழையாக நினைக்காது Traffic police யை விரட்டுவதை நாம் பெருமையடித்ததும் உண்டு.

அன்பார்ந்த மக்களே நமதூரில் உள்ள சிலரின் பொடுபோக்கான தனங்களால் எத்தனையோ குடும்பங்கள் விதவையாகவும் எத்தனையோ பிள்ளைகள் அநாதைகளாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றது. நமதூரை திருத்த Traffic police வந்தால் அதையும் மீறி அவர்களைக் கண்டு பயந்து வேகமாக ஓடி இன்னும் இன்னும் வித்துக்களைக் கூட்டுகின்றோம்.

பெற்றோர்களே! பிள்ளைகளை பொறுப்புள்ளவர்களாகவும் புத்சிசாலிகளாகவும் வளர்த் தெடுங்கள். பெரிய Motor bike களை உங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து அவர்களை மௌத்தாக்குவதோடு மற்றவர்களையும் மௌத்தாக்க வைக்காதீர்கள்.

நாம் சரியாக மற்றவர்களின் உணர்வுகளை மதித்து சட்டதிட்டங்களை பேணுவோமென்றால் நாளை நமதூருக்கு TRAFFIC POLICEஉம் தேவையில்லை.

நமதூரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முப்பெரும் சபைகளும் அடிக்கடி வீதி விபத்துக்களும் மக்களின் போடுபோக்கும் என்ற தொணியில் மக்களை எச்சரிப்பது மட்டுமல்லாமல் பொடுபோக்கான பெற்றோர்களுக்கு தக்க தண்டனையையும் நிர்ணயிக்க வேண்டும் அப்போதுதான் அவர்களின் பிள்ளைகளில் அவர்கள் கவனம் எடுப்பார்கள். 

மேலும் பாடசாலைகளில் வீதி விபத்து பற்றி அடிக்கடி அறிவூட்டப்பட வேண்டும்.


இவ்வாறு ஒவ்வொருத்தரும் வீதி விபத்துக்களை தவிர்ப்பதில் அக்கரை செலுத்த வேண்டும்.

அல்லாஹ்விடம் ஒவ்வருத்தரும் கெட்ட திடீர் மரணத்தை விட்டும் பாதுகாப்புத் தேட வேண்டும்.


" ஸதகா அல்லாஹ்வின் கோபத்தையும் தணித்து கெட்ட மரணத்தைவிட்டும் பாதுகாக்கும்"

நூல் திர்மீதி


" வீதி விபத்தை தவிர்ப்போம்"

தகவலுக்கு நன்றி - 


Sma Base Hospital Sammanthurai
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment