சரித்திரத்தில் தடம் பதிக்கும் சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயம்.

அறிக்கை - பாடசாலை அதிபர்.

எமது சம்மாந்துறை அல்-அர்ஷத் மகாவித்தியாலய பாடசாலையானது கல்வியிலும் ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் பல்வேறுபட்ட சாதனைகளை தேசிய, மாகாண மட்டங்களில் படைத்து வருகின்றது.

2016 ம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் 76 வீதமான மாணவர்கள் சித்தியெய்தி பாடசாலைக்கும், ஊருக்கும், வலையத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் 2015-2016 ஆம் கல்வியாண்டில் சுமார் 7 மாணவர்கள் பல்கலைக்கழத்திற்கு தெரிவாகி அல்-அர்ஷத் பாடசாலையை பலரும் பேசும் பாடசாலையாக மாற்றியுள்ளனர். அதே போல் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தேசிய-மாகாண மட்ட வெற்றிகளை இப் பாடசாலை மாணவர்கள் ஈட்டியுள்ளனர். 

தற்போது 2017 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறும் பாடசாலையில் சாதனை படைத்துள்ளது இதனை இம்முறை வெளியான புலமைப் பரிசில் பரீட்சையின் தரவுகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

01.  என்.எம். வாஹில் அர்ஹப்   - 179 புள்ளிகள்.
02.  எம்.ஐ. பாத்திமா ஹிபா   - 174 புள்ளிகள்.
03.  என்.எஸ்.எம். அஸ்கி   - 166 புள்ளிகள்.
04.  எம்.ஐ. பாத்திமா றீபா   - 165 புள்ளிகள்.
05.  எம்.ஐ. பாத்திமா அஹ்தா   - 163 புள்ளிகள்.
06.  ஏ.பி. பாத்திமா ஹனா   - 161 புள்ளிகள்.
07.  ஏ.ஆர்.எம். தஸ்னீம் சஹி   - 160 புள்ளிகள்.
08.  என். பாத்திமா நுஹா   - 154 புள்ளிகள்.
09.  ஆர்.எஸ்.எம். றிஸ்கான்   - 153 புள்ளிகள்.
10.  என்.எம். பாத்திமா சஜா   - 153 புள்ளிகள்.
11.  ஆர். பாத்திமா ரீமா   - 153 புள்ளிகள்.

அல்-அர்ஷத் பாடசாலையானது சிறந்த கல்வி வளர்ச்சியில் சாதனை படைத்துள்ளமையானது எமக்கும், எமது ஊருக்கும் பெரும் மகிழ்வைத் தந்திருக்கின்றது. 

இதற்கு முதலில் இறைவனுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு இதன் பின்னணியில் உழைத்த அதிபர், பிரதியதிபர், உதவியதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள், கல்விசாரா ஊழியர்கள், என்றென்றும் உறுதுணையாகவிருந்த வலையக் கல்விப் பணிப்பாளர், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், PSI இணைப்பாளர்கள், கல்வி அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், Gulf அமைப்பினர், நலன் விரும்பிகள், பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment